திருமண நாளில் உயிரிழந்த மணப்பெண்.. பெரும் துயரத்திலும் கனத்த இதயத்துடன் நடத்திய கல்யாணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Feb 27, 2023 10:23 AM

இந்தியாவில் தனது திருமண சடங்கின் போது இளம்பெண் உயிரிழந்த சூழலில் அதன் பின்னர் நடந்த சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Gujarat bride dies during wedding day marriage happen as planned

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மரணமடைந்த இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஹீதல்.  இவருக்கும், நரி என்ற கிராமத்தை சேர்ந்த விஷால் என்ற இளைஞருக்கும் இருவரது குடும்பத்தினரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, திருமண நாளும் வர இது தொடர்பான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் மிக மும்முரமாக கவனித்து வந்தனர். தொடர்ந்து தனது திருமண நாளில் மணமக்களும் உற்சாகமாக இருந்த சூழலில், அங்கே ஆடல், பாடல் என உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் குதூகலமாக இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவித சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. அதாவது மணப்பெண் ஹீதல் திடீரென அங்கே மயக்கம் போட்டு விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைக் கண்ட அனைவரும்  பதறி அடிக்க, உடனடியாக ஹீதலை மீட்டு மருத்துவமனையிலும் அவர்கள் சேர்த்துள்ளனர். இதனைத்  தொடர்ந்து மணப்பெண் ஹீதலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

Gujarat bride dies during wedding day marriage happen as planned

Images are subject to © copyright to their respective owners.

இதனை அறிந்து மணமக்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அதே வேளையில் திருமண நாளில் இப்படி நடந்ததால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமலும் அவர்கள் யோசித்துள்ளனர். அப்போது உறவினர்கள் அனைவரும் திருமணம் நின்று விடாமல் நடக்க வேண்டும் என்றும் கூறி, பெண் வீட்டாரிடம் பேசி மணப்பெண் ஹீதலின் தங்கையை மணமகன் விஷாலுக்கு திருமணம் செய்து வைக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். 

இதற்கு ஹீதல் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்க, இறந்த மணப்பெண் ஹீதல் உடல் குளிர் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு விஷால் மற்றும் ஹீதல் சகோதரி ஆகியோரின் திருமணமும் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் ஹீதலின் இறுதி சடங்கு நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | LEO விமான பயணத்தில் விஜய்.. கூட யார் இருக்காங்கன்னு பாருங்க.. வைரல் Pic..!

Tags : #GUJARAT #GUJARAT BRIDE #WEDDING DAY

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gujarat bride dies during wedding day marriage happen as planned | India News.