மனைவியுடன் சென்று அமித் ஷாவை சந்தித்த ரவீந்திர ஜடேஜா.. சந்திப்பு குறித்து வைரல் பதிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார்.
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, தனக்கு ஏற்பட்ட கால் காயத்தில் இருந்து குணமாகி வருகிறார்.
Also Read | "எல்லா இடத்துலயும் அவரு இருக்காருங்க".. தோனி குறித்து கோலியின் வைரல் பதிவு!!
முன்னதாக, இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், தொடருக்கு நடுவே கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகிக் கொள்ள, மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா & அவருடைய மனைவி ரிவாபா ஜடேஜா இருவரும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
32 வயதாகும் ரிவாபா ஜடேஜா 2018 இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
ரிவாபா ஜடேஜா, வலதுசாரி அமைப்பான கர்னி சேனாவின் பெண்கள் பிரிவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா, 2022 ஆம் ஆண்டுக்கான குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
2022 குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி (BJP) வேட்பாளர்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பெயர் இடம்பெற்றுள்ளது.
குஜராத் சட்டசபையின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷாவை ஜாம் நகரில் ரவீந்திர ஜடேஜா & அவரது மனைவி ரிவாபா ஜடேஜா சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜடேஜா பகிர்ந்துள்ளார். "உங்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது" என ரவீந்திர ஜடேஜா பதிவிட்டுள்ளார்.
Also Read | 2023 பட்ஜெட் : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் முக்கிய ஆலோசனை