'எல்லாத்தையும்' எடுத்துக்கிட்டீங்க... அட்லீஸ்ட் இதையாவது 'அவருக்கு' விட்டு வைங்க... சீரியசாக 'அட்வைஸ்' செய்யும் ரசிகர்கள்... என்ன ஆச்சு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 19, 2020 11:30 PM

டெஸ்ட் தொடரில் இடம்பெறாத கே.எல்.ராகுல் தற்போது இந்தியா திரும்பியுள்ளார். அவரை பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுக்கும்படி பிசிசிஐ கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது ஓய்வில் இருக்கும் ராகுல் கிரிக்கெட் வர்ணனையாளர் ஜதின் சப்ருவின் குட்டி மகளை தூக்கி வைத்துக்கொள்வது போன்ற புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு 'நல்ல கம்பெனி' என ஹார்ட்டுகளை பறக்க விட்டிருந்தார்.

KL Rahul takes over Pant’s baby sitter role, Twitter Reacts

அவ்வளவு தான் நெட்டிசன்கள் பொங்கி தீர்த்து விட்டனர். தங்களுக்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல எண்டெர்டெயின்மெண்ட் கிடைத்து விட்டது என ராகுலை  வச்சு செய்து வருகின்றனர். விஷயம் இதுதான். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய டூரின்போது இந்திய வீரர் ரிஷப் பண்ட் கிரிக்கெட் வீரரும், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனுமான டிம் பெயினின் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டார். அப்போது நல்ல 'பேபி சிட்டர்' என நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து இருந்தனர்.

தற்போது ராகுல் அதேபோல குழந்தையை தூக்கி வைத்துக்கொள்ளவும் பண்டிடம் இருந்து ஏற்கனவே விக்கெட் கீப்பர், நம்பர் 5 பேட்ஸ்மேன் போன்ற இடங்களை எடுத்துக் கொண்டீர்கள். அதனால் இந்த வேலையையாவது அவரிடம் இருந்து பிடுங்கி விடாதீர்கள் என சீரியசாக நெட்டிசன்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். இதனால் தற்போது ட்விட்டர் அல்லோகல்லோப்பட்டு வருகிறது. அதிலிருந்து ஜாலியான ஒருசில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.