'டியூசனுக்கு போன 12 வயசு பையன்...' 'அடிக்கடி ஒரே வயிற்றுவலி...' 'செக் பண்ணி பார்த்தப்போ...' 'வெளிய தெரிஞ்சா சூசைட் பண்ணிப்பேன்...' - டியூசன் ஆசிரியர் செய்த காரியம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jul 24, 2020 11:08 AM

குஜராத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் வயிற்று போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது டியூஷன் ஆசிரியரால் பல நாட்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வெளிவந்துள்ளது.

Gujarat 12yr boy abused several days by his tuition teacher

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பள்ளிகள் ஏதும் செயல்படவில்லை, ஆன்லைன் வகுப்பு முடிந்த பின் ஒரு சிலர் தனியார் ஆசிரியரை கொண்டு பிள்ளைகளுக்கு பாடம் நடத்துகின்றனர்.

இந்நிலையில் குஜராத்தின் தலைநகரான அகமதாபாத் மாவட்டத்தில் 12 வயதுடைய மாணவனுக்கு, தால்தேஜ் தாலுகாவை சேர்ந்த 21 வயது பார்த் பரோட் என்னும் ஆசிரியரை கல்வி கற்க பெற்றோர்களால் நியமிக்கப்பட்டார்.

சிறுவனுக்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்ட பெற்றோர் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழக்கமான மருந்துகளுக்குப் பிறகும் அவரது நோய் குறையவில்லை. பின்னர், மருத்துவர் சிறுவனை பரிசோதித்தபோது, அதிர்ச்சியளிக்கும் விதமாக சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவர்கள் சிறுவனிடம் விசாரிக்கும் போது தன் டியூஷன் ஆசிரியர் தான் தன்னை துஷ்பிரயோகம் செய்தார் எனவும், இதனை வெளியே சொல்லனால் தான் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார். இதனால் பயந்து தான் யாரிடமும் கூடவில்லை எனக்கூறியுள்ளார் சிறுவர்.

மேலும் 12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பார்த் பரோட் ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்) கீழ் இப்போது போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என சோலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெ.பி.ஜடேஜா கூறியுள்ளார்.

Tags : #CHILDABUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gujarat 12yr boy abused several days by his tuition teacher | India News.