விமானத்தின் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ தங்க கட்டிகள்.. அதிகாரிகள் தீவிர விசாரணை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானத்தின் கழிவறையில் இருந்து 4 கிலோ தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | அணியில் சேர்க்காததால் கோபப்பட்ட உமேஷ் யாதவ்.. மனம் திறந்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண்..!
கடத்தல்
சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றை கடத்திவரும் நபர்களை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல, இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் கடத்தல் நபர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படி கைதானவர்கள் கடத்தலுக்கு உபயோகிக்கும் வழிமுறைகள் மிகவும் வித்தியாசமானவையாக இருக்கும்.
Images are subject to © copyright to their respective owners.
தங்க கட்டிகள்
இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. சுங்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்த விமானம் ஒன்றை வழக்கம்போல பரிசோதனை செய்தனர். அப்போது விமான கழிவறையில் கருப்பு நிற பை ஒன்று இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை திறந்து பார்த்தபோது அதற்குள் நான்கு தங்க கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்திருக்கின்றனர். இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
1.95 கோடி ரூபாய் மதிப்பு
விமானத்தின் கழிவறையில் இருந்த நான்கு தங்க கட்டிகள் 3,969 கிராம் எடை இருந்ததாகவும் அதன் சந்தை மதிப்பு 1,95,72,400 ரூபாய் எனவும் டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். 1962 ஆம் ஆண்டு சுங்கச் சட்டம் பிரிவு 110ன் கீழ் தங்கத்தை கைப்பற்றியதாகவும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் 2.6 கிலோ எடையுள்ள தங்கத்தை கடத்த முயன்றதாக ஊழியர் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இலங்கையில் இருந்து இந்தியா வந்த பயணி ஒருவரிடமிருந்து தங்க பேஸ்ட்டை அந்த ஊழியர் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.