'அட, இது தெரிஞ்சிருந்தா நேத்தைக்கே வாங்கியிருக்கலாமோ...' 'எகிறும் தங்கம் விலை...' - கலக்கத்தில் மக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த சில நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருவது மக்களிடையே மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்திற்கு முன்பு வரை தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.
அதன்பின் கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின், தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன
மேலும், மத்திய அரசின் 2021-22ஆம் ஆண்டின் பட்ஜெட்டிலும் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது. அதன்காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ரூ.4258-க்கும், பவுனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.34064-க்கு விற்கப்படுகிறது. மேலும், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37192-க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி 90 காசுகள் உயர்ந்து ரூ.72.50க்கு விற்பனையாகி, 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.72,500 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்
