இது என்னடா RCB-க்கு வந்த புது சோதனை!.. நல்ல ப்ளேயர்ஸ் எடுத்தது ஒரு குத்தமா?.. சட்டு புட்டுனு செட்டில் ஆகுங்க... என்ன செய்யப் போகிறார் கோலி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடருக்கான பரபரப்பு எகிறிவிட்ட நிலையில் முதல் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், ப்ளேயிங் 11 குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்து 5 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும் - பெங்களூரு அணியும் மோதுகிறது.
இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி, அதில் மும்பை 17 முறையும், பெங்களூரு 9 முறையும் வென்றுள்ளது. இந்நிலையில், நாளைய போட்டியில் இரு அணிகளும் பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது.
முதல் போட்டியானது சென்னை MA சிதம்பரம் மைதானத்தில் 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. வழக்கமாக இந்த பிட்ச்சானது பேட்ஸ்மேன்களுக்கு சிறிது சிரமமான ஒன்றே ஆகும்.
ஏனெனில், ஸ்பின்னர்களுக்கு மிகவும் கைக்கொடுக்கூடிய பிட்ச் இது. இதனால் இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 150 ரன்கள் எடுத்தாலே ஓரளவிற்கு வெற்றி பெறலாம் என கூறப்படுகிறது.
மும்பை அணி: ரோகித் சர்மா ( கேப்டன்) , கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ( கீப்பர்) , கெயிரின் பொல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, நாதன் கோல்டர் நை/ பியூஸ் சாவ்லா, ராகுல் சஹார், ட்ரெண்ட் போல்ட், பும்ரா.
பெங்களூரு அணி: தேவ்தத் பட்டிக்கல், விராட் கோலி ( கேப்டன்) டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், ராஜட் பட்டிதர்/ முகமது அசாருதீன், சச்சின் பேபி/ சுயாஷ் பிரபுதேசாய், டேனியல் கிரிஸ்டியன், வாசிங்டன் சுந்தர், கெயில் ஜேமிசன்/ கேன் ரிச்சர்ட்சன், முகமது சிராஜ், யுவேந்திர சஹால்.
விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியில் பல வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால் அணி இன்னும் செட்டில் ஆகவில்லை. சிறந்த அயல் நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ள போதும், அவர்கள் ஐபிஎல் அனுபவம் இல்லாத வீரர்கள்.
ஆனால், நடப்பு சாம்பியனான மும்பை அணியில் கடந்த முறை இருந்த வீரர்கள் செட்டிலாகி இன்னும் அணியில் உள்ளனர். எனவே, மும்பை அணியை எதிர்கொள்ள ஆர்சிபி சற்று திணறும் என்பதால் மும்பைக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.