'ஒரு போட்டோ கிடைச்சா இப்படியா இஷ்டத்துக்கு அள்ளி விடுறது'... 'வைரலான போட்டோவிற்கு சொல்லப்பட்ட கதை'... உண்மையான பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇணையத்தில் பகிரப்படும் தகவல்களைச் சரிவரச் சரிபார்க்காமல் அதனை அப்படியே ஷேர் செய்யும் கலாச்சாரம் என்பது தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தான் இந்த சம்பவமும் தற்போது நடந்துள்ளது.
சமீபத்தில் ஒருவர் குழந்தையை தன் மீது வைத்துக் கொண்டு பாடம் எடுப்பது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. பலரும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்த நிலையில் அது நாடு முழுவதும் வைரலானது. வைரலான புகைப்படத்தில் இருப்பது கல்லூரி பேராசிரியர் என்றும் அவரது மனைவி பிரசவத்தின் போது உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. தாய் மரணித்ததால், பேராசிரியர் தனது குழந்தையுடன் பாடம் எடுப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நெகிழ்ந்து போன நிலையில், தங்கள் பங்கிற்குச் சோக ஸ்மைலிகளுடனும், நீங்கள் வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள் என்ற கேப்சனோடும் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வந்தார்கள். இதற்கிடையே இந்த புகைப்படம் குறித்த உண்மை விவரம் தற்போது தெரியவந்துள்ளது. அதில், ''இந்த புகைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. புகைப்படத்தில் இருப்பது மெக்சிகோவைச் சேர்ந்த பேராசிரியர் ஆகும்.
மேலும் பேராசிரியர் வைத்திருப்பது வகுப்பறையில் உள்ள மாணவரின் குழந்தை என்ற தகவலும் தெரியவந்துள்ளது. பாடம் குறித்துக் கொள்ள இடையூறாக இருந்ததால், மாணவரின் குழந்தையைப் பேராசிரியர் தன் மார்போடு சேர்த்து வைத்துக் கொண்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஐந்து ஆண்டுகள் கழித்து இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருப்பது பேராசிரியரின் குழந்தை இல்லை என்பது உறுதியாவிகிவிட்டது.