‘கொரோனாவுக்கு பரிதாபமாக பலியான 14 மாத குழந்தை!’.. ‘இந்தியாவையே உலுக்கிய சோகம்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 07, 2020 11:30 PM

கொரோனா தொற்றால் 14 மாத குழந்தை இறந்துள்ள சோக சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

14 month old child died of Covid19 in Jamnagar, Gujarat

குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தின் புறநகரில் உள்ளது தாரேத் தொழிற்பேட்டை. இந்த தொழிற்பேட்டையில் தினக்கூலியாக பணிபுரிந்து வந்த தம்பதியின் 14 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, உடனே குழந்தை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதோடும், குழந்தைக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

குழந்தையின் தாய் தந்தையருக்கு கொரோனா தொற்று இல்லாதபோதும், ஜாம்நகர் மாவட்டத்திலேயே முதல் ஆளாக குழந்தை பாதிக்கப்பட்டதாக அம்மாவட்ட சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஜெயந்தி ரவி தெரிவித்தார். இந்த நிலையில், சிகிச்சைப்பலனின்றி குழந்தை பரிதாபகரமான நிலையில் உயிரிழந்துள்ளது.