'என்ன ஒரு புத்திசாலித் தனம்!'.. 'கொரோனாலாம் பக்கத்துலயே நிக்க முடியாது!'.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்கொரோனா உலகம் முழுவதும் பரவி தொடர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழலில், இந்த நோய் பரவாமல் தடுக்கும்பொருட்டு உலக நாடுகள் தீவிரமாக பணிபுரிந்துகொண்டிருக்கின்றன.

கொரோனா தொற்று பரவுவதலைத் தடுக்கும் விதமாக உலக நாடுகள் சமூக விலகல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வருகின்றன. இந்த வழிமுறைகளே கொரோனா பரவுவதை தடுப்பதற்கான முதன்மையான வழிமுறையாக கடைபிடிக்கப்பட்டு வரும் சூழலில், மளிகை, காய்கறி, மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே மக்கள் செல்ல வேண்டும் என்றும் அங்கும் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றன.
அந்த வகையில், வெளிநாட்டில் நபர் ஒருவர் நண்பருடன் சேர்ந்து, ஏதோ ஒரு பானத்தை அருந்திக்கொண்டிருக்கிறார். தான் அருந்தும் அந்த கிளாஸை அந்த நபர் ஒரு மடக்கி விரிக்கும் வசதிகொண்ட மர உபகரணத்தில் வைத்து நண்பரிடம் நீட்டி
Cheers 🍻 pic.twitter.com/6oQlzkwYlt
— CCTV IDIOTS (@cctvidiots) April 7, 2020
சியர்ஸ் சொல்லிக்கொள்கிறார். விளையாட்டாக எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
