சுடர்விடும் 'வெளிச்சம்'... கொரோனாவின் 'கோரப்பிடியில்' இருந்து... சகோதரியுடன் சேர்ந்து தப்பிய '9 மாத' பெண்குழந்தை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 08, 2020 02:44 AM

கொரோனா தொற்று இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் 9 மாத பெண்குழந்தை மற்றும் 6 வயது பெண் குழந்தை கொரோனாவில் இருந்து மீண்ட சம்பவம் கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது.

West Bengal’s youngest patient cured From COVID-19

மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 28-ம் தேதி 9 மாத குழந்தை மற்றும் அந்த குழந்தையின் 6 வயது சகோதரி இருவரும் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவரும் குழந்தைகள் என்பதால் அவர்கள் இருவருக்கும் டாக்டர்கள் மிகுந்த சிரத்தை எடுத்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் அந்த இரண்டு குழந்தைகளும் தற்போது பூரண குணமடைந்து உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் வீட்டிற்கு அழைத்துச்செல்ல மருத்துவர்கள் அனுமதித்து இருக்கின்றனர். இந்த இரண்டு குழந்தைகளும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பிய இளம் நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.