'அந்த மருந்து தான் வேணும்' வரிசைகட்டி நிற்கும் உலகநாடுகள்... ஹைட்ராக்ஸி 'குளோரோகுயின்' மருந்தோட வரலாறு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 08, 2020 01:43 AM

உலகை  ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை அடிப்படையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இதனால் இந்த மருந்துக்கு உலக நாடுகள் மத்தியில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. உச்சகட்டமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மருந்தை தங்களுக்கு ஏற்றுமதி செய்யாவிடில் பதிலடி தரப்படும் என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.

COVID-19 Pandemic: History Of Hydroxychloroquine Drugs

டிரம்பின் இந்த பேச்சு உலக அரங்கில் பெரும் விமர்சனங்களை எழுப்பியது. பதிலுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு தருவதாக தெரிவித்து இருக்கிறது. இதேபோல பல்வேறு நாடுகளும் இந்த மருந்தை தந்து உதவுமாறு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. சர்வதேச அளவில் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ள ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் வரலாறு குறித்து இங்கே காணலாம்.

வரலாறு

1630-ஆம் ஆண்டில் பெரு நாட்டில் வைஸிராய் ஒருவரின் மனைவி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மூலிகை வைத்தியர்கள் சின்கோன் என்ற இடத்தில் உள்ள மரத்தின் பட்டையில் இருந்து மருந்து தயாரித்து கொடுத்து குணப்படுத்தினர். இதைத்தொடர்ந்து அந்த மரங்கள் பின்னாளில் சிங்கோனா மரங்கள் என்றும் அதில், காய்ச்சலை குணப்படுத்தக் கூடிய குயினைன் மூலக்கூறு இடம்பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

300 ஆண்டுகள்

அதன்பின் 300 ஆண்டுகள் கழித்து குயினைன் மூலக்கூறில் இருந்து குளோரோகுயின் என்ற மருந்தை கண்டுபிடித்தனர்.

இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப் போரின்போது கொசுவால் பரவும் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு குளோரோகுயின் மருந்து வழங்கப்பட்டது. குளோரோகுயின் மருந்தை பயன்படுத்திய வீரர்கள் மலேரியா நோயில் இருந்து பூரண குணமடைந்தனர்.

முடக்குவாதம்

இதுதவிர வீரர்கள் சிலருக்கு ஏற்கனவே இருந்த முடக்குவாதம், மூட்டு வலி மற்றும் சரும நோய்களும் குணமடைவது தெரியவந்தது. அன்று முதல் முடநீக்கியல் பிரிவில் குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சையிலும் குளோரோகுயின் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

News Credit: News18 Tamil