'ஐசியூ'வில் அனுமதிக்கப்பட்ட 'இங்கிலாந்து' பிரதமருக்கு... 'செயற்கை' சுவாசம் அளிக்கப்படுகிறதா?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 08, 2020 02:16 AM

உலகை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் விட்டு வைக்கவில்லை. தனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததும் உடனடியாக அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். ஆனால் 10 நாட்களுக்கு பின்னரும் அவருக்கு கொரோனாவின் அறிகுறி தென்பட்டதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

UK Prime Minister Boris Johnson not being treated a Ventilator

தொடர்ந்து நேற்று இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து இங்கிலாந்து மக்கள் உட்பட உலக மக்கள் பலரும் போரிஸ் ஜான்சன் குணமடைய வேண்டும் என தீவிர பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சிறந்த மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு ஒன்று போரிஸ் ஜான்சனின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

எனினும் கடந்த 24 மணி நேரத்தில் எந்தவித முன்னேற்றமும் அவரது உடல்நிலையில் ஏற்படவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் சொன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையில் தற்போது வரை போரிஸ் சுயநினைவுடன் தான் இருக்கிறார் என்றும், அவருக்கு செயற்கை சுவாசம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.