இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்1. தமிழகத்தில் 72 வயது முதியவர் உட்பட 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

2. உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
3. கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்திய - அமெரிக்க வாழ் பத்திரிகையாளரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
4. கொரோனா தடுப்பு நடவடிக்கை நாடெங்கும் மேற்கொள்ளப்படும் நிலையில், ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்துதல் வார்டுகளாக மாற்றும் பணியும் நடைபெறுகிறது.
5. ராணிப்பேட்டை அருகே ஃபேஸ்புக்கில் கொரோனா வைரஸ் குறித்து அவதூறு செய்தி பதிவிட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
6. சீனாவின் வுகான் மாகாணத்தில் 76 நாட்களுக்கு பின் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
7. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 72.28க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 65.71க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
8. அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 12 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பால் 1,942 பேர் உயிரிழப்பு.
9. வருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அதை உடனடியாக அளிக்க உத்தரவு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு.
10. கொரோனா தடுப்பு பணிகளுக்காக சுனில் கவாஸ்கர் ரூ.59 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
11. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நடத்தி நிதி திரட்டலாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் யோசனை தெரிவித்துள்ளார்.
