VIDEO: நையப்புடை...! 'எதிர்ல ரெண்டு சிங்கம்...' சிங்கிளா நின்னு கெத்து காட்டிய நாய்...' என்ன தில்லு...!!! - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாட்டில் நாயும் சிங்கமும் சண்டையிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

என்னதான் காட்டிற்கு ராஜா சிங்கம் என நாம் கூறினாலும், கோவம் வந்தால் பூனையும் புலியாகும் என்பதற்கேற்ப சிங்கத்துடன் நாய் சண்டையிட்டு துரத்திய வீடியோவை பிரவீன் கஸ்வன் ஐ.அப்.எஸ் எனும் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் பார்வையாளர்கள் சிலர் ஜீப்பில் நின்று வீடியோ எடுக்க, அவர்களைப் பின்தொடர வரும் இரண்டு சிங்கங்களை அங்கிருக்கும் நாய் ஒன்று துணிச்சலுடன் எதிர்த்து சண்டையிடுகிறது. நாயின் குரைக்கும் சத்தம் மற்றும் துணிச்சலான சண்டையைப் பார்த்து மிரண்டு போன சிங்கங்கள் இரண்டும் அங்கிருந்து பின்வாங்கி செல்கின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் நாயின் துணிச்சலைப் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
Need this much confidence in life. Dog vs Lion. It also highlights issue of stray dogs & wildlife interaction. @zubinashara pic.twitter.com/lNu7X4ALm5
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 10, 2021

மற்ற செய்திகள்
