மகன்கள் யாரும் சொன்ன ‘பேச்சை’ கேட்குறதில்ல.. அதனாலதான் இப்டியொரு ‘முடிவு’.. அதிரவைத்த அப்பா..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிள்ளைகள் சொன்ன பேச்சை கேட்காததால் தனது சொத்துக்களை நாய்க்கு எழுதி வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தின் பரிபாடா கிராமத்தை சேர்ந்தவர் ஓம் நாராயண வர்மா (50). இவருக்கு 5 மகன்கள் உள்ளனர். மகன்கள் யாரும் பெற்றோரை சரியாக கவனிக்காமல் விட்டாதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக மகன்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு ஓம் நாராயண வர்மா கோபத்தில் இருந்துள்ளார். இதனை அடுத்து தனது 18 ஏக்கர் நிலத்தை தான் வளர்த்து வரும் செல்ல நாய் ஜாக்கிக்கு 9 ஏக்கரும், மீதமுள்ள 9 ஏக்கரை தனது மனைவி சம்பா வர்மாவுக்கு எழுதி வைத்துள்ளார்.
மகன்களின் நடத்தை பிடிக்காததாலும், அவர்கள் தனது பேச்சை கேட்காததாலும், தன்மீது பாசமாய் சொன்ன பேச்சை கேட்கும் நாய்க்கு நிலத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் தனது வாரிசாக நாய் ஜாக்கியையே உயிலில் எழுதி வைத்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த ஓம் நாராயண வர்மா, ‘நான் எனது பிள்ளைகளை நம்பவில்லை. என் செல்ல நாய் ஜாக்கி என்மீது பாசமாக இருக்கிறது. அதை என் மனைவி பாசமாக பார்த்துக் கொள்கிறார். அதனால் இருவருக்கும் சொத்துக்களை எழுதி வைத்துள்ளேன். என் மரணத்துக்கு பிறகு மனைவி சம்பாவுக்கும், நாய் ஜாக்கிக்கும் தான் சொத்துக்கள் செல்ல வேண்டும். நாயை யார் கவனித்துக் கொள்கிறார்களோ அவர்கள்தான் சொத்தின் அடுத்த வாரிசு’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
