‘எழுந்து நின்றார் அத்தி வரதர்’.. ‘அலைமோதும் மக்கள் கூட்டம்’.. பொது தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 01, 2019 10:58 AM

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று முதல் அத்தி வரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

Athi Varadar darshan now in standing posture

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி அளிக்கும் அத்தி மரத்தாலான அத்தி வரதரை காண நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கும் அனந்தசரஸ் குளத்திலிருந்த எடுக்கப்பட்ட அத்தி வரதரின் சிலை, கடந்த 1 -ம் தேதியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கான வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 31 நாட்களாக சயன கோலத்தில் காட்சி அளித்து வந்த அத்தி  வரதர், இன்று முதல் 17 நாட்களுக்கு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

இதுவரை அத்தி வரதரை தரிசிப்பதற்காக சுமார் 48 லட்சம் பேர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. நின்ற கோலத்தில் உள்ள அத்தி வரதரை தரிசிக்க அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பொது தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், அவர்களை தங்க வைத்து தரிசனத்துக்கு அனுப்ப சுமார் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #ATHIVARADAR #TEMPLE #KANCHEEPURAM #VARADHARAJAPERUMAL