உங்கள உள்ள விட முடியாது.. வீல்சேரில் வந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த ஹோட்டல்.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி: டெல்லி ஹோட்டல் ஒன்றில் வீல் சேரில் வந்த பெண்ணை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
ஹோட்டலின் உள்ளே விட மறுப்பு:
டெல்லி அருகே உள்ள குருகிராமில் இயங்கும் புகழ் பெற்ற ஓட்டலில் ஒன்று ‘ராஸ்டா’ எனப்படும் பப். அந்த பப்பில் உணவகமும் சேர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சிரிஸ்டி பாண்டே என்ற மாற்றுத் திறனாளி பெண், சாப்பிடுவதற்காகதனது நண்பர், குடும்பத்துடன் சென்றுள்ளார் ஆனால், வாசலில் நின்றிருந்த உணவக ஊழியர்கள் சிரிஸ்டி மற்றும் அவரின் குடும்பத்தாரை ஹோட்டலின் உள்ளே விட மறுத்துவிட்டார். பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அவர்களை உள்ளே விடவில்லை.
வீல்சேரை உள்ளே விட முடியாது:
இதனால், அங்கு சில மணி நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. தான் சந்தித்த நிகழ்வு தொடர்பாக சிரிஸ்டி நேற்று டிவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'நேற்று நாங்கள் ராஸ்டா ஓட்டலுக்கு சென்றோம். எங்களை உள்ளே விட மறுத்த நிலையில், உணவகத்தின் மானேஜர் வந்தார். அவர் சொன்ன வார்த்தை எங்களை உலுக்கி விட்டது. வீல்சேரை உள்ளே விட முடியாது. மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும்' என தெரிவித்தார்' என கூறியுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு பல்வேறு தரப்பில் இருந்தும் ஓட்டலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேடையில் ஏறி அவர் நடனமாட விரும்பினார்:
இதற்கு பதிலளிக்கும் விதமாக ‘ராஸ்டா’ நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'வீல்சேரில் வந்த பெண்ணுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் மேடையில் ஏறி அவர் நடனமாட விரும்பினார். ஆனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. அவர் அங்கு சென்றால் அவருக்கு விபத்து ஏற்படும் என்பதால் அனுமதி மறுத்தோம்' எனக் கூறியுள்ளது.