'அந்த பையன என்னோட ஒப்பிடாதீங்க!.. அவரு எங்கேயோ போயிட்டாரு!'.. இளம் வீரரின் ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோன சேவாக்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஎன்னால் படைக்க முடியாத சாதனையை ஒரு இளம் வீரர் படைத்துவிட்டார் என விரேந்தர் சேவாக் பேசியுள்ளார்.

ஐபிஎல் 14ஆவது சீசன் 25ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 154/6 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்த களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஓப்பனர்கள் ஷிகர் தவன், பிரித்வி ஷா இருவரும் அதிரடியாக விளையாடினர். இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணி 16.3 ஓவர்களில் இலக்கை அடைந்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியில், இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா முதல் ஓவர் 6 பவுண்டரிகள் விளாசி அசத்தினார். ஷிவம் மாவி அந்த ஓவரில் ஒரு வைட் வீசியதால், மொத்தம் 25 ரன்கள் கிடைத்தது. இதுகுறித்துப் பேசிய விரேந்தர் சேவாக், நான் படைக்க முடியாத சாதனையை ஒரு இளம் படைத்துவிட்டார் எனக் கூறினார்.
"6 பந்துகளில் தொடர்ச்சியாக பவுண்டரி அடிப்பது சாதாரன விஷயம் கிடையாது. சரியான முறையில் கேப் பார்த்து அடித்தால் மட்டுமே இது சாத்தியம். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் தொடர்ச்சியாக 6 பந்துகளை வெளுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால், அந்த ஓவர்களில் 18-20 ரன்கள் மட்டுமே கிடைக்கும். தொடர்ந்து 6 பவுண்டரி அல்லது 6 சிக்ஸர் அடித்தது கிடையாது. எங்கு கேப் இருக்கிறது என தெரிந்து அதற்கேற்றாற்போல் செயல்பட்டால் மட்டுமே இந்த சாதனையை படைக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய சேவாக், "பிரித்வி ஷா இன்று சிறப்பாக விளையாடினார். ஷிவம் மாவி, பிரித்வி இருவரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியவர்கள். ஒரே அணியில் இருந்ததால், இருவரின் பலம் பலவீனம் அவர்களுக்கு தெரிந்திருக்கும். அதன் காரணமாக கூட பிரித்வி, மாவி ஓவரில் அதிரடியாக விளையாடியிருக்கலாம். எனினும், 6 பந்துகளில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடிப்பது சாதாரன விஷயம் கிடையாது.
நானும் ஆஷிஸ் நெக்ராவும் கூடத்தான் இந்திய அணிக்காக ஒன்றாக விளையாடினோம். ஆனால், உள்ளூர் கிரிக்கெட்டில் அவரின் பந்தில் தொடர்ச்சியாக 6 பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை. பிரித்வி ஷா அபாரமாக விளையாடினார். அதில் குறையேதும் சொல்ல முடியாது. அவர் சதமடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" எனக் கூறினார்.

மற்ற செய்திகள்
