சுடுகாட்டில் நடந்த இறுதிச்சடங்கு.. கடைசி நொடியில் நடந்த அதிசயம்.. ஷாக் ஆன உறவினர்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி: டெல்லியில் இறந்துப் போனவர் என்று நினைத்த நபர் இறுதி சடங்கு நடப்பதற்கு கடைசி நொடியில் உயிரோடு எழும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நரேலாவில் 62 வயதான சதீஷ் பரத்வாஜ் என்பவர் நேற்று முன் தினம் உயிரிழந்தாக கூறி குடும்பத்தினர் உறவினர்களுடன் சேர்ந்து அவரின் சடலத்தை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர்.
அப்போது சதீஷ் உடல் மீது போர்த்தப்பட்ட போர்வையை எடுத்துவிட்டு அவரது உடலுக்கு தீ வைக்க முயற்சித்துள்ளனர். சதீஷ் திடீரென கண் விழித்துள்ளார். இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
புற்றுநோய் பாதிப்பு:
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சதீஷ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில காலமாகவே மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெண்டிலேட்டரில் இருந்து அவரை எடுத்தவுடன் மூச்சு விடுவதை நிறுத்தியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவர் இறந்து விட்டார் என அழுது துடிக்கவே அந்த இடம் சோக மயமானது.
மருத்துவ பரிசோதனை செய்யவில்லை:
அவர் உண்மையில் இறந்து விட்டார் என அனைவரும் நம்பினர். முறையான மருத்துவ பரிசோதனை செய்து உறுதி செய்யாமல் முடிவு செய்தனர். உடனடியாக அவர் இறந்த செய்தியை உறவினர்களுக்கு, நண்பர்களுக்கும் மற்றும் ஊர் மக்களுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலை அறிந்த அவரது உறவினர்களும் பதறியடித்து ஓடோடி வந்தனர்.
இறுதிசடங்கு:
இதையடுத்து சதீஷ் இறந்துவிட்டதாக அனைவரும் கருதி, மருத்துவமனையின் அறிவுறுத்தலை கேட்காமலேயே சதீஷ் குடும்பத்தார் அவர் இறந்துவிட்டார் என நினைத்து இறுதிச்சடங்கு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். மற்ற சடங்குகள் முடிந்து தீ வைக்க முனையும் போது திடீரென்று கண் விழித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பாகவும் இது போன்று இறந்துவிட்டார் என்று நினைத்து உறவினர்கள் நல்லடக்கம் செய்ய முனையும் போது கண் விழித்த சம்பவம் நடந்துள்ளது. இன்னும் ஒருபடி மேலாக இறுதிசடங்கு முடிந்து பல நாட்கள் கழித்து உயிரோடு வீடு திரும்பியதும் கொரோனா காலங்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது.