என்னடா 'ஆணுறை' வாங்காம வந்துருக்க...? 'அதுக்கு ஒரு ஐடியா வச்சுருக்கேன்...' 'யோசிக்காம போட்ட பிளான்...' - 'கொஞ்ச' நேரத்தில் நடந்த விபரீதம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Aug 25, 2021 03:50 PM

காதலர்கள் குதூகலமாக இருக்க சென்ற இடத்தில் இளைஞர் செய்த செயல் அவரின் உயிரையே எடுத்துள்ளது.

gujarat boy applied glue not having a condom sex girlfriend

குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்த இளைஞர் சல்மான் மிர்சா. கடந்த ஜூன் மாதம் 22-ஆம் தேதி தன் காதலியுடன் ஜூஹாபுரா பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது காதலர்கள் தனிமையில் போதைப் பொருட்களையும் உட்கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.

நேரம் செல்ல செல்ல போதையில் இருந்த காதலர்கள் இருவரும் மனம் ஒத்து உடலுறவு வைத்துக்கொள்ள நினைக்கும் போது தான் பாதுகாப்புக்கு ஆணுறை கொண்டு வரவில்லை என்பது சல்மான் மிர்சாவிற்கு தெரிந்தது .

மது போதையில் இருந்தாலும் தெளிவாக ஆணுறை இல்லாமல் கலவி செய்யக்கூடாது என எண்ணிய சல்மான் மிர்சா விபரீத முடிவு எடுத்துள்ளார்.

அப்போது அந்த ஹோட்டல் பகுதியில் இருந்த வலுவான பிசினை தனது ஆணுறுப்பில் தடவி கலவியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சிறிது நேரத்தில் அந்த இளைஞருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பயத்துடனே ஹோட்டல் அறையை காலி செய்து இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் இந்த இளைஞரோ சாலையில் செல்லும் போது மயக்கம் போட்டு விழுந்துக் கிடந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற இளைஞருக்கு தெரிந்த நபர் ஒருவர் மீட்டு இல்லத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

சல்மானின் உடல்நிலை மிகவும் மோசமானதாக மாறியதால், அவரது குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் சல்மான் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் தனது ஆணுறுப்பில் தடவிய பிசின் அவரது உடல் நிலையை மோசமடைய வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இளைஞரின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gujarat boy applied glue not having a condom sex girlfriend | India News.