அட கடவுளே...! 'இவரா' இப்படியெல்லாம் செய்தாரு...? ஒரு காலத்துல 'டிவி ஷோ'ல எல்லாம் வந்து 'ஃபேமஸ்' ஆனவரு...! - ஆளு 'யாரு'னு தெரிஞ்சப்போ 'ஷாக்' ஆன போலீசார்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதேசிய சாம்பியன் பட்டம் வென்ற பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் அதிர வைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டதால் தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று (22-09-2021), டெல்லி அருகேயுள்ள மோதி நகர் பகுதியில் காவல் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது. பைக்கில் வந்த ஒரு இளைஞர் சந்தேகப்படும் விதமாக நின்றுக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை வழிமறித்து சோதனை செய்தனர். அவர் ஓட்டிக்கொண்டு வந்த இருசக்கர வாகனம் கீர்த்தி நகர் பகுதியில் திருடப்பட்டது என தெரியவந்தது. உடனே அந்த பைக்கை ஓட்டி வந்த இளைஞரை பிடித்த காவல்துறையினர் கிடுக்குப்பிடி போட்டு விசாரித்தனர்.
அந்த இளைஞர் உத்தம் நகர் பகுதியில் வசிப்பவர் என்றும், அவருடைய பெயர் ‘ஃபைட்டர்’ என அழைக்கப்படும் சுராஜ் (Suraj) என்றும் தெரியவந்தது. இவர் சம்சி மண்டி பகுதியில் வரும் நிறைய பேரிடமிருந்து மொபைல் போன்களையும், தங்க நகைகள் திருடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது, மேலும் இவர் வழிப்பறி செய்த நகைகள் மட்டும் 2.5 கிலோ அளவுக்கு இருக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியானது.
சாதாரண வாகன சோதனையில் ஏதோ ஒரு வழிப்பறி திருடன் மாட்டிக்கொண்டான் என கருதிய போலீசாருக்கு பின்னர் தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.
தொழில்முறை வழிப்பறி திருடனாக வாழ்ந்து வந்த சுராஜ், ‘டேக்வாண்டோ’ கராத்தே போட்டியில் தேசிய அளவில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்பதை அறிந்து காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
28 வயதே ஆகும் சுராஜ் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் ஒரு சிறந்த பாடகரும் ஆவார். இதுதவிர பிரபல இந்தியன் ஐடால் சீசன்-4 நிகழ்ச்சியில் 2008-ம் ஆண்டு கலந்துகொண்டு டாப்-50 போட்டியாளர்களில் ஒருவராக வந்துள்ளார்.
சுராஜ் மற்றும் அவரின் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி ஒன்றும் துப்பாக்கி குண்டுகளும், கத்திகள், 55 திருடப்பட்ட மொபைல் போன்களும், 5 பைக் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சுராஜ் தன்னுடைய நண்பர்களுடன் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
