'ஸாரி' கட்டிட்டு வந்ததால் நடந்த அக்கப்போரு...! 'டிரெண்ட் ஆன ஹோட்டலுக்கு அடுத்த ஆப்பு...' ஒரேடியா 'சோலிய' முடிச்சு விட்டாங்களா...! - டிவிஸ்ட்க்கு மேல் டிவிஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசேலை கட்டியுள்ளதாக கூறி சாப்பிட அனுமதிக்காத ஹோட்டலுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லியில் இயங்கும் ஒரு ரெஸ்டாரண்ட்டில் பெண் ஒருவர் சேலை அணிந்து வந்த காரணத்தால், இம்மாதிரியான உடைகள் அணிந்து வந்தால் உள்ளே அனுமதிக்க முடியாது என ஓட்டல் ஊழியர் ஒருவர் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகியது.
அந்த ஓட்டலின் விதிமுறைகளின் படி மார்டன் டிரஸ் அல்லது செமி கிளாசிக் மட்டுமே அணிந்து வருபவரை மட்டுமே அனுமதிப்போம் எனக் கூறியுள்ளனர். இதனால் கடுப்பான அந்த பெண்மணி ஓட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளிவந்தது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து, புடவை கட்டி சென்ற பெண்ணுக்கு ஆதராவாக #saree என்னும் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. ஆனால் அதற்கு அடுத்ததாக சம்மந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் அந்த நிகழ்வுக்கு மறுப்பு தெரிவித்தது.
அதில், 'எங்கள் ஓட்டலின் மீது குற்றம் சாட்டிய பெண்மணி ஹோட்டலில் உணவு அருந்த முன்பதிவு செய்யவில்லை. ஓட்டல் முழுவதும் ஆட்கள் இருந்ததால் அவரை நாங்கள் கொஞ்ச நேரம் பொறுமையாக இருக்க வேண்டிக் கொண்டோம்.
ஆனால், அதற்கு முன்பே அவர் கத்தி கூச்சலிட ஆரம்பித்தார். அதோடு, எங்கள் ஊழியர் ஒருவரையும் கைநீட்டி அறைந்துள்ளார். அப்போது அவரை சமாளிக்க எங்கள் எங்கள் மேனேஜர் ஒருவர் ஆடை குறித்து சொல்லி அவர்களை அங்கிருந்து வெளியே போகுமாறு தெரிவித்தார்' எனத் தெரிவித்துள்ளார்.
அதோடு, இதற்கான ஆதாரங்களையும், வீடியோக்களையும் ஓட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இப்போது நடந்திருக்கும் கதையோ வேறுவிதமானது. பிரச்சனைக்கு உள்ளான அந்த ரெஸ்டாரண்ட்டிற்கு மேலும் ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது.
அதாவது, அந்த ஓட்டல் நடத்துவதற்கு சரியான உரிமம் பெறவில்லை என்ற காரணத்திற்காக, ரெஸ்டாரண்டை மூடுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மேலும் அப்பகுதி சுகாதார இன்ஸ்பெக்டர் சுகாதார வர்த்தக உரிமம் இல்லாமலும், சுகாதாரமற்ற நிலையிலும் ரெஸ்டாரண்ட் இயங்கி வந்ததைக் கண்டு, அதை மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவமும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.