சுட்டெரிக்கும் சூரியன்.. பிளக்கும் வெயில்.. 72 வருஷத்துல இப்படி இல்ல.. அதிர்ச்சி ரிப்போர்ட்.. எங்க?
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொட்டால் ஷாக்.. லட்சத்துல வாங்கி கோடில விற்கலாம்.. கூட்டாளிகளின் நூதன உருட்டால் அதிர்ந்துபோன நபர்..!
வெப்பநிலை
இந்த வருட பிப்ரவரி மாதத்தின் போதே, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை கிடுகிடுவென எகிற துவங்கியது. குறிப்பாக மத்திய இந்தியா மற்றும் வட இந்தியாவில் வெப்ப அலைகள் வீசிவருகின்றன. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வுமையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், டெல்லியில் 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. இது பொதுமக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
72 வருடம்
சனிக்கிழமையன்று டெல்லியில் 42.4 டிகிரி செல்சியசஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் இந்த அளவு வெப்பம் பதிவாவது 72 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் நிகழ்ந்திருப்பதாக கூறுகின்றனர் நிபுணர்கள்.
சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 1951 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரையில் உள்ள காலகட்டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-13 தேதிகளில் 41.6 டிகிரி வெப்பம் பதிவானது. இதுவே சமீபத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக இருந்துவந்தது. இந்நிலையில் இந்த மாதம் 8 ஆம் தேதி 42.4 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.
கொளுத்தும் சூரியன்
டெல்லியில் இந்த மாதத்தில் சராசரியாக நிலவும் வெப்பநிலையை விட 8 டிகிரி அதிகமாக தற்போதைய வெப்பநிலை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. ஏப்ரல் 2021 இல் அதிகபட்ச அதிகபட்ச வெப்பநிலை 42.2 டிகிரியாக பதிவானது. இதுவே 2020 இல் 40.1 டிகிரியாகவும், 2019 இல் 42.1 டிகிரியாகவும் மற்றும் 2018 இல் 42 டிகிரி செல்ஸியஸாகவும் பதிவானது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில் கடுமையான வெயில் காரணமாக ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கலாம் எனவும் மக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.