மெட்ரோ ரெயிலில்.. இளைஞர் கன்னத்தில் அறைந்த இளம்பெண்??.. டீ ஷர்ட் விலையால் வந்த பிரச்சனையா??.. பரபரப்பு வீடியோ!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jul 16, 2022 12:40 PM

டெல்லியில் மெட்ரோ ரெயில் ஒன்றில் நடந்ததாக கூறப்பட்டு, இணையத்தில் வலம் வரும் வீடியோ ஒன்று, பலரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தி உள்ளது.

delhi metro fight between woman and young man video surfaces

Also Read | "அம்மாடியோவ்.." கின்னஸ் சாதனை படைத்த காளான் மோதிரம்.. "ஒரு மோதிரத்தில் இத்தன ஆயிரம் வைரமா??.." பிரமிப்பில் ஆழ்ந்த மக்கள்

மெட்ரோ ரெயில் மூலம், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு தக்க நேரத்தில் சென்று சேர்ந்து விடலாம் என்பதால், இதன் மூலம் ஏராளமானோர் ஒரு நாளைக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், டெல்லி மெட்ரோ ரெயில் ஒன்றிற்குள், ஒரு இளைஞரும், ஒரு இளம் பெண்ணும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டது தொடர்பான வீடியோ தான், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

delhi metro fight between woman and young man video surfaces

இந்த அடிதடிக்கான காரணம் குறித்து வெளியான தகவலின் படி, அந்த இளம் பெண் தான் வாங்கிய டீ ஷர்ட் ஒன்று, சுமார் 1000 ரூபாய்க்கு மேல் மதிப்பு இருந்ததாக கூறியதாகவும், ஆனால் அவர் அருகே இருந்த இளைஞரோ, நிச்சயம் இந்த டீ ஷர்ட் 150 ரூபாய்க்கு மேல் இருக்காது என கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தான், இருவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் அடிதடி உருவாக காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. தான் வாங்கிய டீ ஷர்ட்டின் விலையைக் குறைத்து சொன்னதால், கோபம் அடைந்த அந்த பெண், இளைஞரிடம் சண்டை போட தொடங்கி உள்ளார். தொடர்ந்து அந்த இளைஞரை தாக்கியதாக வீடியோ மூலம் தெரிய வரும் நிலையில், அந்த இளைஞரோ பதிலுக்கு பொது இடம் என எச்சரிக்கையும் விடுக்கிறார். ஆனால், அந்த பெண் நிறுத்தாமல் இருக்கவே, பதிலுக்கு அந்த இளைஞரும் இளம்பெண்ணை தாக்க ஆரம்பிக்கிறார்.

delhi metro fight between woman and young man video surfaces

இப்படி மாறி மாறி அடித்துக் கொண்டு, கன்னத்தில் அறைந்த படி இருக்கும் நிலையில், மெட்ரோ ரெயில் நிலையம் வந்ததும், இருவரும் ஏதோ கூறிக் கொண்டு இறங்கிச் செல்கிறார்கள். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் சரிவர தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் கவனத்தை பெற்று வரும் நிலையில், பலரும் இது பற்றி ஏராளாமான  கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

அவர்கள் இருவரும் ஏற்கனவே தெரிந்தவர்களா அல்லது ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட வீடியோவா, ஒன்றாக வந்த பிறகு ஏதேனும் பேச்சில் ஈடுபட்ட போது, இருவருக்குள்ளும் தகராறு உருவானதா என ஏராளமான கருத்துக்களையும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், இந்த வீடியோ எந்த சமயத்தில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் எடுக்கப்பட்டது என்பதும் சரி வர தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

Also Read | முதல் மனைவிக்கு நேர்ந்த பெரும் சோகம்.! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வேதனை பதிவு.. எப்படி நடந்தது.?

Tags : #DELHI #METRO #FIGHT #COUPLES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Delhi metro fight between woman and young man video surfaces | India News.