"பத்தி எரியும் இலங்கை.. பொங்கி எழும் மக்கள்.." போராட்ட களத்திற்கு நடுவே காதல் ஜோடி செய்த காரியம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கான பொருளாதார நெருக்கடியை சுமார் 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை, தற்போது சந்தித்து வருகிறது.
Also Read | "எவ்ளோ நாள் ஆச்சு இவங்கள இப்டி பாத்து!!.." லண்டனில் மீட் செய்த தல, சின்ன தல.. "கண்ணே பட்டுடும் போல"
நிலைமையை சரி செய்ய இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடையவே, கடந்த பல நாட்களாகவே அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இதற்கு நடுவே, பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதன் காரணமாக, பல கிலோ மீட்டர்களுக்கு கையில் கேனுடன் மக்கள் காத்திருந்த புகைப்படங்களும் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடையவே, இலங்கை தலைநகர் கொழும்பு-வில் இருக்கும் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சமீபத்தில் முற்றுகையிட்டனர். மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், உள்ளே இருக்கும் அறைகள், நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை ஆக்கிரமித்து வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தற்காலிக அதிபராகவும் நியமிக்கப்பட்டார். மேலும், நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்வதாகவும், மேற்கு பிராந்தியங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாகவும் நேற்று அறிவித்திருந்தார் ரணில்.
கோத்தாபய ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை இலங்கை மக்கள் தொடர்ந்து ஆக்கிரமித்து வரும் நிலையில், வரும் 20 ஆம் தேதி பாராளுமன்றம் கூட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இப்படி அடுத்தடுத்து இலங்கை அரசியலில் பரபரப்பு திருப்பங்கள் மற்றும் பொது மக்களின் போராட்டம் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இத்தனை ரணகளத்திற்கு மத்தியில் ஒரு ஜோடி செய்த சம்பவம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே வைத்து, போராட்ட களத்தில் பங்கெடுத்த ஜோடி ஒன்று, மாறி மாறி முத்தமிட்டுக் கொண்ட புகைப்படம், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் அலுவலகத்தை கையகப்படுத்துவதற்கு வழிவகுத்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, இந்த ஜோடியின் புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பரபரப்பும், ஆவேசமும் நிறைந்த போராட்ட களத்திற்கு மத்தியில், ஜோடியின் இந்த செயல் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
Couple goals!
A couple was seen displaying affection after participating in anti-government protests that led to the taking over of the Prime Minister's office in Colombo. pic.twitter.com/mpPG1y2fvD
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 13, 2022