காசு கொடுத்து செல்லாத 500, 1000 ரூ நோட்டுகளை லட்ச கணக்கில் வாங்கிக் குவித்த 2 பேர்..போலீசுக்கு கிடைச்ச ரகசிய தகவல்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் செல்லாத பழைய ருபாய் நோட்டுகளை வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.

கடந்த புதன்கிழமை டெல்லியை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கு வித்தியாசமான ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 64 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
2 பேர்
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் ஆசாத் சிங் (48) மற்றும் இஜாஸ் அகமது (45) என்பது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து பேசிய கிழக்கு டெல்லி பகுதியின் டிசிபி பிரியங்கா காஷ்யப்,"பழைய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது குறித்து எங்களுக்கு புதன்கிழமை ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை லக்ஷ்மி நகர் மெட்ரோ நிலையம் அருகே போலீஸ் குழுவால் பொறி வைக்கப்பட்டது. இதன்மூலம் 61,97,000 ரூபாய் மதிப்புள்ள 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய இரண்டு பைகளுடன் இருவரும் பிடிபட்டனர். நோட்டுகளின் நம்பகத்தன்மையை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்" என்றார்.
ஆசாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் பால் பண்ணை நடத்துகிறார் என்றும் லக்ஷ்மி நகரில் வசிக்கும் இஜாஸ், அப்பகுதியில் இ-ரிக்ஷாக்களை வாடகைக்கு விட்டுவருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கும்பல்
இவர்கள் இருவரும் 12 லட்சம் வரை செலவழித்து இந்த பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்கியிருப்பதாக கூறியுள்ள போலீசார் இதற்கு பின்னால் பெரிய கும்பல் இருப்பதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு குழுக்கள் அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பழைய ரூபாய் நோட்டுகளை சேகரித்து வந்திருப்பதாகவும் அவற்றை இந்த குழுவை சேர்ந்தவர்களிடம் ஒப்படைத்து அதற்கான கமிஷனை இருவரும் பெற்றிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
விரைவில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் செய்யப்படுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். டெல்லியில் 64 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது டெல்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
