SIDHU MOOSE WALA CASE: பாடகரை கொன்ற பின்.. கொலையாளிகள் செய்தது என்ன? வடமாநிலங்களை அதிரவைத்த சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல பாடகர் சித்து மூசா வாலா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வட மாநிலத்தை அதிர வைத்தது. அதைவிட பெரும் கொடுமையான சம்பவமாக அவரை கொன்றுவிட்ட பிறகு கொலையாளிகள் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு காரில் செய்த அலப்பறை வீடியோவாக இப்போது வலம் வருகிறது.

பஞ்சாபி படுகர் சித்து மூசா வாலா கடந்த மே மாதம் 21ஆம் தேதி அவருடைய சொந்த ஊரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை அடுத்து வட மாநிலமே அதிர்ந்தது. இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் மிரட்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பாடகர் சித்து மூசா வாலாவை கொன்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணையை தொடங்கிய போலீசார் இதற்கென தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கொலையாளிகளை தேடி வந்தனர். அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை அங்கித் சிர்ஸா என்பவர் உட்பட ஒவ்வொருவராக பிடிபட்டு கிட்டத்தட்ட 4 கொலையாளிகள் பிடிபட்டனர். இவர்கள் தற்போது ஏழு நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவதற்கு உத்தரவிடப்பட்டு இருக்கின்ற நிலையில், கொலை செய்த பிறகு இவர்கள் துப்பாக்கியுடன் காரில் சென்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த வீடியோவில் கொலைக்குப் பிறகு இந்த கொலையாளிகள் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு, ஏதோ ஒரு பெரும் சாதனையை செய்ததுபோல் பெருமிதத்துடன் காரில் கோஷமிட்டு, துப்பாக்கியை தூக்கிக் காட்டிக் கொண்டாடிக் கொண்டிருந்தது பதிவாகி இருக்கிறது.
இதை பார்த்த பலரும் இது குறித்து கண்டனம் தெரிவித்து வருவதுடன் துப்பாக்கி கலாச்சாரம் இப்படி சாதாரணமாக மக்கள் கையில் பரவியிருப்பதற்கு உதாரணமாகவும் இதை சுட்டிக்காட்டி பலரும் பேசி வருகின்றனர்.
Also Read | 24 மணிநேரத்துல அடுத்தடுத்து 21 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்..கடும் அச்சத்தில் அந்தமான் மக்கள்..!

மற்ற செய்திகள்
