விமான நிலையம் வந்த 126 TROLLEY BAGS.. திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. "இதுவரைக்கும் புடிச்சதுல இதான் அதிகமாம்.."
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில தினங்களுக்கு முன், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் வந்த 126 Trolley பேக்குகளை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

பொதுவாக, விமானத்தின் மூலம் ஒரு நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு திருட்டு பொருட்கள் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்களை யாரேனும் தலை முடிக்குள் வைத்து மறைத்தோ, ஆடைகளில் வைத்து மறைத்தோ கொண்டு வந்து அதிகாரிகளிடம் சிக்கி கைது ஆகும் செய்திகள் பலவற்றை நாம் அடிக்கடி கடந்து சென்றிருப்போம்.
ஏறக்குறைய அப்படி ஒரு சம்பவம் தான், தற்போது டெல்லி விமான நிலையத்தில் நிகழ்ந்து, பலரையும் பரபரப்பு அடைய செய்துள்ளது.
126 Trolley பேக்குகள்
DRI அதிகாரிகளுக்கு டெல்லி விமான நிலையத்தில் போதைப் பொருள் வந்து சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. துபாயில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சரக்கு விமானம் ஒன்று வந்துள்ளது. தங்களுக்கு கிடைத்த தகவலின் படி, அந்த விமானத்தில் இருந்த 126 Trolley பேக்குகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். மொத்தம் 54 கிலோ போதை பொருட்கள், அந்த பைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தான் அதிகமாம்..
இவற்றின் மொத்த மதிப்பு 434 கோடி ரூபாய் ஆகும். இதுவரை விமான நிலையங்கள் மூலம் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களிலேயே அதிக மதிப்பு கொண்டது இது தான் என DRI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த Trolley பேக்குகளில், இழுக்கக் கூடிய கம்பிகள் வழியாக போதை பொருட்களை கடத்திக் கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, ஒரு நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
பஞ்சாப், ஹரியானால கூட..
அந்த நபர் உகாண்டாவில் இருந்து துபாய் வழியாக, டெல்லி விமான நிலையம் வந்தடைந்ததும் தெரிய வந்துள்ளது. இது போக, இன்னும் சிலரையும் இந்த கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் தேடி வருகின்றனர். இது தவிர, பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களிலும் போதை பொருள் கடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிய வந்த நிலையில், சுமார் 7 கிலோ போதை பொருளை அப்பகுதியில் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
நடப்பு ஆண்டில் இதுவரைக்கும், சுமார் 3,300 கிலோ போதை பொருட்கள், விமானம் மூலம் கடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல், கடந்த 3 மாதங்களில் மட்டும் 60 கிலோ போதை பொருள், பயணிகள் விமானம் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
