"இப்டி எல்லாமா ஒருத்தர் அவுட் ஆகுறது?.." நொந்து நூடுல்ஸ் ஆன பேட்ஸ்மேன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jun 24, 2022 10:27 PM

கிரிக்கெட் போட்டிகளை எடுத்துக் கொண்டாலே, அடிக்கடி நிறைய அழகான தருணங்களும், எப்போது நினைத்து பார்த்தாலும் மறக்க முடியாத வரலாற்று சிறப்பு மிக்க பல போட்டிகளும் நிறைந்திருக்கும்.

Henry nicholls dimissal in test cricket in a bizarre way

அதே போல, வித்தியாசமாகவோ அல்லது சற்று விநோதமாகவோ, கிரிக்கெட் போட்டிகளில் அரிதாக நடக்கக் கூடிய சில நிகழ்வுகளும் அரங்கேறும்.

அப்படி ஒரு சம்பவம் தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது நடந்துள்ளது.

டெஸ்ட் தொடர்..

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டையும் வென்ற இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது.

Henry nicholls dimissal in test cricket in a bizarre way

இப்படியும் அவுட் ஆவாரா??..

இந்த போட்டியில், நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் அவுட்டான விதம் தொடர்பான வீடியோக்கள் தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக, டேரில் மிட்செல் 109 ரன்களும், டாம் ப்ளெண்டல் 55 ரன்களும் எடுத்திருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில், ஜேக் லீச் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருந்தார்.

Henry nicholls dimissal in test cricket in a bizarre way

தொடர்ந்து, இங்கிலாந்து அணியும் தங்களின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. முன்னதாக இந்த போட்டியில், நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மிட்செலுடன் இணைந்து ஹென்றி நிகோல்ஸ் ஆடி வந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்துக் கொண்டிருந்த போது, ஜேக் லீச் வீசிய 56 ஆவது ஓவரில், ஹென்றி நிகோல்ஸ் பந்தை நேராக அடித்தார். அப்போது அவர் அடித்த பந்து, எதிர் பக்கம் நின்ற டேரில் மிட்செல்லின் பேட்டில் பட்டு, ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த அலெக்ஸ் கையில் கேட்சாக மாறியது.

வைரலாகும் வீடியோ

நேராக சென்ற பந்து, எதிர் பக்கம் நின்ற பேட்ஸ்மேன் பேட்டில் பட்டு, கேட்சாக மாறியதால், மிகுந்த அதிர்ச்சியுடன் வெளியேறினார் ஹென்றி நிக்கோல்ஸ். இது தொடர்பான வீடியோவைக் காணும் பலரும், இப்படி கூட வினோதமாக ஒருவர் அவுட் ஆவாரா என வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோவும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

Tags : #ENG VS NZ #HENRY NICHOLLS #BIZARRE OUT

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Henry nicholls dimissal in test cricket in a bizarre way | Sports News.