’அம்மாவை இழந்த ’15 வயது சிறுமி’... தந்தையும், தாத்தாவும் செய்த வெறிச்செயல்...!’ - தமிழக சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்படவே மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

தஞ்சையில் 15 வயது சிறுமி கர்ப்பமாக காரணமான தாத்தாவையும், அதே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையும் போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாட்டைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்ததால், அவருடைய 2 மகள்களும் சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மூத்த மகள் மட்டும் அவரது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
அப்போது பெற்ற மகளுக்கு இளங்கோவன் பாலியல் தொல்லை தருவது அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வரவே, அந்த சிறுமியை, தாத்தா மாரிமுத்து வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளனர். சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில், அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்றதில் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்துள்ளது.
இது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பினர் மூலம் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. அவர்கள் சிறுமியிடம் விசாரித்ததில் தாத்தா மாரிமுத்து மற்றும் தந்தை இளங்கோவன் செய்த கொடுமைகள் தெரிய வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து இருவரையும், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்
