'நள்ளிரவில் வந்த இன்னோவா கார்...' 'மளமளவென தீப்பிடிச்சு எரிந்த மெத்தை...' - மசாஜ் பார்லர் பெண்ணிற்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமசாஜ் சென்டரில் பணிபுரிந்த 27 வயது பெண்மணி ஒருவர் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரத்தின் மக்தல்லா பகுதியில் வசித்து வரும் தாய்லாந்தை சேர்ந்த 27 வயதான வனிந்த பவுசோர்ன் என்ற பெண்மணியின் சடலம் எரிந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) அன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சூரத் நகர காவல்துறையினரின் விசாரணையில், வனிந்த பவுசோர்ன் என்ற பெண்மணி தாய்லாந்தை சேர்ந்தவர் என்றும், அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் தாய்லாந்தின் ரோய் இ.டி மாகாணத்தில் எம்.ஏ. டி மீவாங் புவாவில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது.
மேலும் வனிந்த பவுசோர்ன் சூரத்தில் மசாஜ் பார்லர் மற்றும் ஸ்பாவில் பணிபுரிந்தும், மக்தல்லா பகுதியில் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தும் வாழ்ந்து வருகிறார்.
வழக்கு தொடர்பான விசாரணையில் இறந்த பெண்மணியின் வீட்டருகில் இருக்கும் நபர்கள், பவுசோர்னின் வீட்டிற்கு, அதிகாலை 1.30 மணியளவில் ஒரு இன்னோவா காரில் மூன்று பேர் வந்திருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் வீட்டில் தரையில் இருக்கும் ஒரு மெத்தை மட்டுமே தீப்பிடித்துள்ளதாகவும், ஆனால் அறையில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு படுக்கைக்கு தீ பிடிக்கவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், இந்த வழக்கில் கொலைக்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என கூறினார். மேலும் சில போதைப்பொருள் உபயோகித்து இருந்ததால் கூட அந்தப் பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் இருந்திருக்கும் எனக்கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
