"எனக்கு உங்க பொண்ண புடிச்சுருக்கு"... 'கல்யாணம்' பண்ணி வைங்க... '13' வயது 'சிறுமி' மீது... ஆசைப்பட்ட 55 வயது 'பில்டிங்' காண்ட்ராக்டர்... இறுதியில் நேர்ந்த 'கொடூரம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியின் நரோலா என்ற பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் சிங் (வயது 55). கட்டிட காண்ட்ராக்டராக இவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் அப்பகுதியிலுள்ள வீட்டின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அங்கு அர்ஜுன் சிங்கிடம் பலர் பணிபுரிந்து வரும் நிலையில், 13 வயது சிறுமி ஒருவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சிறுமி அங்கு பணிபுரியும் கட்டிட மேஸ்திரியின் மகள் ஆகும். இந்நிலையில், அந்த சிறுமியின் மீது அர்ஜுன் சிங்கிற்கு விருப்பம் இருந்து வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமியின் மீது தனக்கு விருப்பம் உள்ளதாகவும், அதனால் சிறுமியை தனக்கு திருமணம் செய்து கொள்ள தான் ஆசைப்படுவதாகவும் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, அர்ஜுன் சிங்கை கடுமையாக திட்டி எச்சரித்து அனுப்பியுள்ளார்.
ஆனாலும் அடங்காத அர்ஜுன் சிங், மேலும் பலரிடம் இதுகுறித்து கூறி சிறுமியின் தந்தையிடம் பேசி சமரசம் செய்து வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். சிறுமியின் உறவினர் ஒருவரிடம் இது குறித்து அர்ஜுன் சிங் பேசியுள்ளார். எல்லாம் சரியாக நடந்தால் அந்த சிறுமியின் குடும்பத்திற்கும், உங்களுக்கும் பண உதவிகள் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். அப்போது அந்த சிறுமியின் உறவினர், 'உங்கள் வயது என்ன, சிறுமியின் வயது என்ன?' என கூறி அர்ஜுன் சிங்கை அசிங்கப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அர்ஜுன் சிங், அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து சிறுமியின் உறவினரை தாக்கியுள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிய அர்ஜுன் சிங் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
