‘நேசமணியை காப்பாற்ற இவரால் மட்டுமே முடியும்!’.. ‘சிஎஸ்கே அணியின் வைரல் ட்வீட்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 30, 2019 01:23 PM

உலக அளவில் ட்ரெண்ட் ஆன #Pray for Nesamani என்ற ஹேஷ்டேக்கிற்கு பதிலளிக்கும் வகையில் சிஎஸ்கே அணி தனது ட்வீட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளனர்.

csk mentioned dhoni and tweets on pray for nesamani

‘சிவில் இஞ்சினியரிங் லேனர்ஸ்’ என்ற ட்விட்டர் பக்கத்தில், சுத்தியல் படத்தை பதிவிட்டு கேட்கப்பட்ட கேள்விக்கு, விக்னேஷ் பிரபாகர் என்ற இளைஞர் ஒருவர் அது ‘டங் டங்’ என்று ஒலியெழுப்பும், இந்த சுத்தியல் காண்ட்ராக்டர் நேசமணியின் தலையில் விழுந்து அவர் பாதிக்கப்பட்டார் என்று அந்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, நமது நெட்டிசன்கள் #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, உலகளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர். இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

அதில், தோனியின் படத்தை குறிப்பிட்டு ‘தலையில் அடிபட்டுள்ள நேசமணியை நம் தோனியால் மட்டுமே காப்பாற்ற முடியும். அவர் இங்கிலாந்தில் உள்ளார்’. என்று பதிவிட்டுள்ளனர். மேலும், ‘pray for nesamani,yellove,thala’ என்ற ஹேஷ்டேக்கை சேர்த்து குறிப்பிட்டுள்ளனர்.

 

 

 

 

Tags : #CHENNAI-SUPER-KINGS #MSDHONI #PRAY FOR NESAMANI #VIRAL TWEET