'முதல் நாள் - 45 கோடி...' '2வது நாள் - 197 கோடி...' '3வது நாள்- 231 கோடி...' படிப்படியாக 'பொருளாதாரத்தில் முன்னேறும்' மாநிலம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட மூன்றாவது நாளில் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 3ஆம் கட்டமாக மே 17 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை தொடர்கிறது.
இதனிடையே சில நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகளை திறைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் கடந்த மார்ச் 23-ம் தேதி கர்நாடகாவில் மூடப்பட்ட மதுக்கடைகள் கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டன.
திறக்கப்பட்ட முதல் நாள் அன்றே மது பிரியர்கள் போட்டி போட்டிக் கொண்டு பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். சிலர் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரக்கு வாங்கிய பில்லை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பெருமைபட்டுக் கொண்டனர்.
தமிழகத்தில் இன்று முதல் (மே-7) மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், கர்நாடக எல்லையோரம் வசிக்கும் தமிழக குடிமகன்களும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி கர்நாடகாவுக்குச் சென்று மது வாங்கி வந்தனர்.
இதனால் கர்நாடகாவில் முதல் நாளில் 45 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது.
நேற்று முன்தினம் செவ்வாய் அன்று விற்பனை பலமடங்கு அதிகரித்து 197 கோடி ரூபாய்க்கு மது விற்பனையான நிலையில், மூன்றாவது நாளான நேற்று 231.6 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. வரும் நாட்களில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.