'அந்த வைரஸ்கள் போலவே’... ‘கொரோனாவுக்கும் மருந்து கண்டுப்பிடிப்பதில்’... வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 05, 2020 07:35 PM

எச்.ஐ.வி, டெங்கு போன்று கொரோனாவுக்கும் தடுப்பூசி கண்டுப்பிடிக்க முடியாத நிலைமை ஏற்படலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா சிறப்பு தூதர் டாக்டர்  டேவிட் நப்ரோ கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WHO envoy warns covid 19 vaccine may never be developed

கொரோனா வைரசுக்கு எதிராக இதுவரை மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இந்நிலையில், லண்டனில் உள்ள குளோபல் ஹெல்த் இம்பீரியல் கல்லூரியின் மருத்துவ பேராசிரியரும், உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா சிறப்பு தூதர் டாக்டர்  டேவிட் நப்ரோ சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், ‘தடுப்பூசி கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு பலம் வாய்ந்த வைரஸ்கள் உள்ளன. பல வைரஸ்களுக்கு மருந்துகள் இல்லை. சில நாடுகளில் டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள் இருந்தாலும் அது 9 முதல் 45 வயது உடையவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளது. எச்.ஐ.வி., டெங்கு போன்ற வைரஸ்களுக்கு இதுவரை தடுப்பூசி இல்லாத நிலையே உள்ளது. அதேபோல் கொரோனாவுக்கும் தடுப்பூசி கண்டுப்பிடிக்க முடியாத நிலை உருவாகலாம். அப்படி தடுப்பூசி உருவாக்கப்பட்டாலும், பாதுகாப்பனதாகவும், பலனளிக்கக்கூடியதாகவும் இருக்குமா என்பது சந்தேகம் தான்.

ஒரு மருந்து தயாரித்தால் அது வெற்றிபெறுமா என்று உடனே கணிக்க முடியாது. அதற்கென பல கட்ட சோதனைகள் உள்ளன’ என தெரிவித்துள்ளார். இதேபோல் ஹூஸ்டனில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றின் பேராசிரியர் டாக்டர் பீட்டர் ஹோடெஸ் பேசுகையில், “நாங்கள் 18 மாதங்களுக்குள் ஒரு தடுப்பூசியை உருவாக்கிவிட முடியும் என துரிதப்படுத்தவில்லை. இது, சாத்தியமற்றது என்றும் அர்த்தம் கிடையாது. ஆனால், அப்படி அமைந்தால் அது ஒரு வீர சாதனையாகும்” எனக் கூறியிருந்தார்.

எனினும் முந்தைய நோய்களான எச்.ஐ.வி. மற்றும் மலேரியா போலின்றி கொரோனா வைரஸ் வேகமாக மாறாது என்பதால், தாமதம் ஆனாலும் தடுப்பூசி நிச்சயம் கண்டுப்பிடிக்க முடியும் என்று அமெரிக்காவின் முன்னணி கொரோனா நிபுணர் டாக்டர் அந்தோணி ஃபாஸி உள்பட பல மருத்துவ நிபுணர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. இதனால், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டுகிறார்கள். ஏற்கனவே 102 கொரோனா தடுப்பூசி ஆய்வு சோதனைகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதில் 2 தடுப்பூசி மருந்துகள் மனிதர்களிடம் சோதனை நடத்தி வருகின்றன.