'ஊரடங்கு முடிஞ்சு தான் கிளைமாக்ஸ்'...'இந்த பொருட்களின் விற்பனை செம அடி வாங்கும்'...அதிர்ச்சியில் நிறுவனங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு உத்தரவால் கோடைக் கால வீட்டுச் சாதன பொருட்களின் விற்பனை பெருமளவில் சரியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது பிரபல நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையே ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பினாலும் அதன் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கோடைக் காலங்களில் மக்கள் பொதுவாக ஏசி , ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் வாங்குவது வழக்கம். ஆனால் பலரும் தற்போது வீட்டிலேயே முடங்கி கிடைப்பதால், ஊரடங்கு முடிந்த பிறகு மக்களுக்கு செலவீனம் என்பது அதிகமாக இருக்கும். பள்ளிக்குச் செலுத்த வேண்டிய கட்டணம், கல்லூரி கட்டணம் என மக்களுக்கு பாரம் அதிகம். இதன் காரணமாகப் பலரும் புதிய மின்னணு சாதனங்களை வாங்குவதைத் தவிர்ப்பார்கள்.
இதன் அடிப்படையில் ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு 30 சதவீத கோடைக் கால விற்பனை சரியும் எனப் பல தயாரிப்பு நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. அதேபோன்று செல்போன் விற்பனையும் ஆன்லைன் மற்றும் கடைகளில் அடியோடு நின்றுள்ளது. அதுவும் 25 முதல் 30 சதவீதம் சரிவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
