'இது விவாதம் இல்ல.. நாட்டின் இப்போதைய தேவையே இதுதான்!'.. தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடியின் புதிய ‘கொள்கை!’
முகப்பு > செய்திகள் > இந்தியா2014-ல் முதன்முதலாக பிரதமராகப் பதவியேற்றது முதலே ஒரே தேசம், ஒரே தேர்தல் எனும் முழக்கத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மத்தியில் காணொளியில் பேசிய பிரதமர் மோடி, ஒரே தேசம்; ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதம் அல்ல, இப்போதைக்கான தேவையே இதுதான். மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் எல்லாவற்றுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தயார்படுத்தி நாடு முழுவதும் ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும். அரசாங்கங்கள் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட நலத்திட்டங்களை அப்போதுதான் மக்களுக்கு தடையின்றி செய்ய முடியும்.
நமது அரசியல் சாசன கடமைகள் குறித்து காந்தியடிகள் நிறைய குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசன உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது. நமது கடமைகளைச் செய்தால் நமது உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பது காந்தியின் கூற்று. நூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. ஆகவே காலாவதியான சட்டங்களை அகற்றுவது எளிதாக்கப்பட வேண்டும். பழைய சட்டங்களை திருத்தம் செய்வதை இயல்பாக்க வேண்டும்” என பேசினார்.
மக்களுக்கு அரசியல் சாசன அறிவை எடுத்துச் செல்வதில் அதிகாரிகள் புதிய உத்திகளை கையாள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்
