‘வெகு வேகமாக வந்த காரை நிறுத்திய போலீஸார்’.. காரை ஓட்டிவந்த பெண்ணை பார்த்ததும் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரிட்டனில் அதிகாலையில் வேகமாக வந்த காரை கண்ட போலீசார் சந்தேகம் அடைந்து அந்த காரை நிறுத்தியபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

North Yorkshire பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின்போது, கார் கதவை திறந்து பார்த்த போலீசார் அந்த காரை செலுத்தி வந்தது ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண் என்பதை அறிந்ததும் அதிர்ந்து போயுள்ளனர். விசாரித்ததில் அந்த பெண் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மருத்துவமனை சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது.
Stopped a car in the early hours due to minor concerns re manner of driving. Very heavily pregnant and upset female in labour trying to get herself to hospital. Of course we made her car safe and took her to the maternity ward. Not just crime! 🤰🚔
— PC 870 Lou 💙👮♀️ (@870_pc) November 29, 2020
அதன் பொருட்டு, தனது காரை தானே ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு அப்பெண் செல்வதை அறிந்த போலீசார், உடனே காரில் இருந்து அப்பெண்ணை இறக்கி பத்திரமாக மீட்டு அவரை மகப்பேறு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்ட போலீஸாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மற்ற செய்திகள்
