‘மேட்ச் பிக்சிங் புகாரில்’... ‘இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு’... ‘போலீசார் சம்மன்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Nov 29, 2019 10:38 AM

சூதாட்டப் புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவருக்கு, போலீசார் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

India pacer Abhimanyu Mithun to be quizzed over KPL fixing

கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் டி20 கிரிக்கெட் லீக் போட்டி நடைப்பெற்றது. இந்தப் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக, சில வீரர்கள் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, கிரைம் பிரிவு போலீசார் சூதாட்டப் புகார் தொடர்பாக விசாரித்து வந்தனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டது குறித்து, பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அஸ்பக் தாரா, 4 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேரை, பெங்களூரு மத்திய குற்றப்பிரவு போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நடைப்பெற்ற விசாரணையில், சிவமோகா அணியின் கேப்டனாக இருந்த அபிமன்யூ மிதுனுக்கும் தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராக, பெங்களூரு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அபிமன்யூ மிதுன் மீதான புகாரை விசாரிப்பது குறித்து பிசிசிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக பிரிமீயர் லீக் மேட்ச் பிக்சிங் வழக்கில், சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசப் போட்டியில், இந்திய அணி சார்பில் 4 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள அபிமன்யூ மிதுன், பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #BCCI #CRICKET #ABHIMANYUMITHUN #SUMMON