'எங்ககிட்டயே இன்னும் அப்ரூவல் வாங்கல...' மொதல்ல நாங்க டெஸ்ட் பண்ணனும்... உலக சுகாதார நிறுவனம் அதிரடி...!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா வைரஸிற்கான முதல் தடுப்பு மருந்தை ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இதுநாள் வரை குறைந்த பாடில்லை. இந்நிலையில் தற்போது ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிந்துள்ளதாக செய்தியை வெளியிட்டது. மேலும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், தனது மகள்களுக்கு ஸ்புட்னிக்-5 என்று பெயரிடப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி, அதில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் வரும் அக்டோபர் மாதம் முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை இந்த ஸ்புட்னிக்-5 மருந்து உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இன்று (13.08.2020) அறிவித்துள்ள செய்தி குறிப்பில் கொரோனா வைரஸிற்கு ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக கூறும் ஸ்புட்னிக்-5 மருந்தை ஆய்வு செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலோ, ஆய்வு முடிவுகளோ இல்லாமல் எவ்வாறு மக்களுக்கு செலுத்த முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய அரசு, உலக சுகாதார நிறுவனம் ஸ்புட்னிக்-5 மருந்தை ஆய்வு செய்து பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதை வரவேற்றுள்ளது.
மேலும் உலக நாடுகள் அனைத்தும் உலக சுகாதார நிறுவனம் அதிகாரபூர்வமாக ஒப்புதலுக்காக காத்துக்கொண்டுள்ளனர் என கூறலாம்.