'இதுக்காகதான் போன பாத்துட்டு இருந்தாரா?'.. அதுமட்டுமில்ல, ராகுலின் இன்னொரு வைரல் காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jun 21, 2019 11:32 AM
17-வது மக்களவைக் கூட்டத்தொடரின் முதல் 2 நாட்களில் புதிய உறுப்பினர்களும், புதிய சபாநாயகராக ஓம் பிர்லாவும், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் முன்னிலையில் பதவியேற்பு உரையை நிகழ்த்தினர்.
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றிய முக்கிய உரையை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிக் கொண்டிருந்தார். அனைவராலும் முக்கியமாகக் கருதப்படும் இந்த உரையை குடியரசுத் தலைவர் நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது இருக்கையில் அமர்ந்தபடி மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்த வீடியோ வெளியாகி பரவியது.
பின்னர் ஒரு தேசியக் கட்சித் தலைவரே, குடியரசுத் தலைவரின் 5 ஆண்டுத் திட்டங்கள் பற்றிய உரையின்போது இப்படி இருந்தது ஏற்புடையதல்ல என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கினாலும், போனுடன் விளையாண்டுக்கொண்டிருக்கும் ராகுல் காந்தியின் கவனத்தை ஒருமுகப்படுத்த அவர் யோகா பயிற்சி எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரின் ரிஜூஜூவும் விமர்சித்தனர்.
இதேபோல், மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ பேசும்போது, குடியரசுத் தலைவர் பேசுவதை விட அப்படி என்ன போனில் முக்கியமான விஷயம்? அது சரி, அவர் தனது கட்சி சம்மந்தப்பட்ட விஷயங்களிலேயே பிடிப்பில்லாமல்தான் இருக்கிறார் என்று விமர்சித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் ஷர்மா இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் செயலுக்கான விளக்கத்தை அளித்தார். அதன்படி, ‘ராகுல் காந்தி யாரையும் அவமரியாதை செய்யவில்லை; குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசும்போது, இந்தியில் சில கடினமான, ஆழமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவற்றிற்கு என்ன அர்த்தம் என ராகுல் காந்தி, தம் போனில் தேடிப் பார்த்திருப்பார். குடியரசுத்தலைவர் உரையாற்றிய அந்த வீடியோவை எடுத்துப் பாருங்கள், ராம்நாத் கோவிந்த் பேசும்போது அரங்கில் இருந்த பாதி அமைச்சர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்காக அவர்கள் அவமதிப்பு செய்துவிட்டார்கள் என்று சொன்னால் அவர்கள் ஒப்புக்கொள்வார்களா? ஆனால் ராகுல், ராம்நாத்தின் கவனிக்கவே செய்தார்’ என்று ஆனந்த் ஷர்மா விளக்கமளித்துள்ளார்.
தவிர குடியரசுத் தலைவரின் உரைக்கு, தனக்கு முன்னால் இருந்த மேஜையில் கைதட்ட போன சோனியாகாந்தியின் கைகளை கமுக்கமாக தடுத்திழுத்த புகைப்படமும் தேசிய ஊடகங்களில் வைரலாகி வருகிறது.