‘பிரிந்து வாழும் கணவர் மூலம் குழந்தை வேணும்..’ வித்தியாசமான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 24, 2019 06:44 PM

மும்பையில் பிரிந்து வாழும் கணவர் மூலம் குழந்தை வேண்டுமென பெண் ஒருவர் குடும்பநல நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Woman plea to have child with estranged husband in Mumbai

பிரிந்துவாழும் கணவர் மூலம் நேரடியாகவோ அல்லது செயற்கை கருத்தரிப்பு முறையிலோ குழந்தை வேண்டுமென 35 வயது பெண் ஒருவர் மும்பையில் குடும்ப நல நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2017ஆம் ஆண்டு அவருடைய கணவர் மனைவி தன்னைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு பதிலாக தனக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டுமென மனைவியும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டப்பூர்வமாக இருவருக்கும் இன்னும் விவாகரத்து கிடைக்காத நிலையில் மனைவி இப்படி ஒரு வித்தியாசமான கோரிக்கையுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கணவர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதற்கு எந்த வகையிலும் தன்னால் உதவ முடியாது, விருப்பமும் இல்லை எனக் கணவர் பதிலளித்துள்ளார்.

அரிதான வழக்காக இருப்பதால், ஒரு பெண் தனது வாரிசைப் பெருக்கிக் கொள்ள நினைப்பது அவரது அடிப்படை உரிமை எனப் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை நீதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அதேசமயம் கணவரை இதற்காக வற்புறுத்த முடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். இறுதியாக பெண்ணின் கோரிக்கையை ஆதரித்த நீதிமன்றம் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெறுவது தொடர்பாக கணவன், மனைவி இருவரும் மருத்துவ ஆலோசனை பெற உத்தரவிட்டுள்ளது.

Tags : #RARECASE #JUDGEMENT