பைக் ஏறியதும்.. CUSTOMER கிட்ட ஓட்டுநர் சொன்ன விஷயம்.. "ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இப்படி இருந்த மனுஷனா??.." மெர்சலான நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில், நகரப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள், ஓலா, உபேர், ராபிடோ உள்ளிட்ட கேப் நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்தி, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

அந்த வகையில், இளைஞர் ஒருவர், Rapido மூலம் பைக் ஒன்றை புக் செய்து பயணம் மேற்கொண்ட நிலையில், தனது பயணம் பற்றி அவர் பதிவிட்ட ட்வீட் ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
பெங்களூரு பகுதியை சேர்ந்த Parag Jain என்ற இளைஞர் ஒருவர், Rapido செயலி மூலம் பைக் ஒன்றை புக் செய்துள்ளார். தொடர்ந்து, அவர் புக் செய்த பைக்கில் வாலிபர் ஒருவர் வரவே, பைக்கில் ஏறிய Parag-இடம், "நீங்கள் எந்த மாடியில் வேலை செய்கிறீர்கள்?" என அந்த Rapido ஊழியர் கேட்டுள்ளார். தொடர்ந்து, பராக்கும் தான் வேலை பார்க்கும் நிறுவனம் பற்றி தகவலை தெரிவித்துள்ளார்.
அப்போது, அந்த பைக் ஓட்டி வந்த நபர் சொன்ன தகவலைக் கேட்டு, பராக் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் விட்டார். பராக் வேலை பார்த்து வரும் அதே கட்டிடத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் வேலை செய்து வந்ததாக அந்த ஓட்டுநர் தெரிவித்துள்ளார். சீன நிறுவனம் ஒன்றில், அவர் பணி செய்து வந்ததாகவும், 2020 ஆம் ஆண்டு, சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதால், தனது வேலையை அவர் இழந்ததாகவும் பராக்கிடம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பேரிடர் உருவாகவே, வேறு வேலை கிடைக்காமலும் அவர் சிரமப்பட்டு வந்த நிலையில், திரைப்படம் இயக்கும் ஆர்வம் இருந்ததால், தன்னிடம் இருந்த சேமிப்பு அனைத்தையும் போட்டு, மினி சீரிஸ் ஒன்றையும் அந்த ஓட்டுநர் இயக்கி உள்ளார். 15 திரைப்பட விழாக்களில், அந்த சீரிஸ் தேர்வான பிறகும், பெரிய அளவில் பணம் எதுவும் சேரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளாக, வேலை ஏதும் இல்லாமல், நிதி நெருக்கடி காரணமாக இருந்த அந்த நபர், தற்போது Rapido-வில் பார்ட் டைம் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ஆனால், தான் Rapido ஓட்டுவதை தனது தாய்க்கு தெரியாமல் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பராக், அந்த ஓட்டுநரின் தகவலையும் வெளியிட்டு, ஏதாவது உதவி இருந்தால் செய்யவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மினி சீரீஸ் இயக்கி, பல விருதுகள் வென்ற நபர், தற்போது Rapido வாகனம் ஓட்டி வரும் தகவல், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
