"அவங்கள மாதிரி மாறனும்".. ரூ.48 லட்சம் செலவுல 15 ஆபரேஷன் செய்துகொண்ட இளம்பெண்.. ஆனா இப்போ இப்படி ஒரு சிக்கல் வந்துடுச்சாம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Aug 12, 2022 02:17 PM

பிரபல நடிகை கிம் கர்தாஷியன் போலவே இருக்க வேண்டும் என லட்ச கணக்கில் செலவு செய்த இளம்பெண்ணுக்கு புதிய சிக்கல் முளைத்திருக்கிறது. இதனிடையே அவரது புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Woman spent Rs 48 lakh on surgery to look like Kim Kardashian

Also Read | "ஒவ்வொரு நிமிஷமும் செத்துப் பிழைக்கிறோம்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க".. அமெரிக்காவில் மரணமடைந்த மகள்.. இந்தியாவில் மன்றாடும் பெற்றோர்..!

அமெரிக்காவை சேர்ந்த மாடலும், நடிகையுமான கிம் கர்தாஷியனுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனாலேயே சமூக வலை தளங்களில் கிம் வெளியிடும் புகைப்படங்கள் கோடிக்கணக்கான லைக்குகளை பெறும். இதனிடையே அவருடைய தீவிர ரசிகைகைள் சிலர் அவரைப்போலவே மாறவேண்டும் என தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தென் கொரியாவை சேர்ந்த செர்ரி லீ என்னும் இளம்பெண் கிம் கர்தாஷியன் போலவே மாற லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்.அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கே தன்னை அடையாளம் தெரியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார் லீ.

Woman spent Rs 48 lakh on surgery to look like Kim Kardashian

15 அறுவை சிகிச்சைகள்

28 வயதான லீ தென்கொரியாவில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் இவர் பிறந்தபோது இவருக்கு ஹான்பியோ எனப் பெயர் சூட்டியுள்ளனர். சிறுவயது முதலே இவருக்கு கிம் என்றால் கொள்ளைப் பிரியமாம். அதனாலேயே அவரைப்போலவே மாற முயற்சித்திருக்கிறார் லீ. இதன் காரணமாக 20 வயதிற்குள்ளாகவே 15 முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார். இதற்காக 48 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார் இவர்.

Woman spent Rs 48 lakh on surgery to look like Kim Kardashian

இதுபற்றி பேசிய அவர்,"கிம் எப்போதுமே எனக்கு ஒரு உத்வேகமாக இருந்தார். அவர் என் பார்வையில் உலகின் மிக அழகான பெண். உண்மையில் நான் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்ட நபராகத் தெரிகிறேன். நான் மேற்கத்திய தோற்றத்தில் இருக்கிறேன். இதனால் எனது கொரிய குடும்பத்தில் சிலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை" என்றார்.

வருத்தம்

மேலும், இதுபற்றி பேசிய அவர்,"சிகிச்சையை எப்போது நிறுத்த வேண்டும் என்று எனக்குத் தெரியும். மேலும் அறுவை சிகிச்சைகள் எதையும் நான் இப்போது திட்டமிடவில்லை. நான் விரும்பிய தோற்றத்தை அடைந்துவிட்டேன். எனது ஒரே வருத்தம் நான் ஏன் இதை முன்பே செய்யவில்லை என்பதுதான்" என்றார்.

Woman spent Rs 48 lakh on surgery to look like Kim Kardashian

முன்னதாக, அமெரிக்க மாடல் ஜெனிபர் பேம்ப் லோன் என்பவர் கிம் கர்தாஷியன் போல மாற கடந்த 12 ஆண்டுகளில் 40 அறுவை சிகிச்சைகள் செய்திருந்தார். இதற்காக 4.9 கோடி ரூபாய் செலவும் செய்திருக்கிறார். இருப்பினும் தான் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிவித்திருந்த அவர் மீண்டும் தன்னுடைய நிஜ முகத்துக்கே திரும்புவதற்காக சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்திருந்தது கடந்த வாரம் வைரலாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "எனக்கும் அது நடந்துச்சு".. இனவெறி பேதத்துக்கு ஆளானதாக முன்னாள் நியூசி. கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் பரபரப்பு அறிக்கை..!

Tags : #WOMAN #SURGERY #KIM KARDASHIAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman spent Rs 48 lakh on surgery to look like Kim Kardashian | World News.