கணவர் விஷயத்தில்.. காதலனுடன் சேர்ந்து 'மனைவி' போட்ட திட்டம்.. "அந்த ஒண்ணே ஒண்ணு நடந்ததால எல்லாம் தலகீழ மாறிடுச்சு"
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம், தோடபிட்டரகல்லு பகுதியை சேர்ந்தவர் அனுபல்லவி. இவரது கணவர் நவீன் குமார். இவர் அப்பகுதியில், சொந்தமாக மாவு மில் ஒன்றை வைத்துள்ளார். இது போக, கேப் டிரைவராகவும் நவீன் குமார் பணிபுரிந்து வந்துள்ளார்.

Also Read | "ஆத்தாடி, ஒரு லிட்டர் தேள் விஷம் இம்புட்டு கோடியா?".. வியக்க வைக்கும் மவுசு.. 'பின்னணி' என்ன??
இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அனுபல்லவிக்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தனது காதலனுடன் வாழவும் அனுபல்லவி முடிவு செய்துள்ளார். இதற்காக தனது கணவரான நவீன் குமாரை கொலை செய்ய அனுபல்லவி திட்டம் போட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றது.
அனுபல்லவியின் காதலரான ஹிமாவந்த், கூலிக்கு ஆள் தேடி வந்துள்ளார். அதன்படி, மூன்று பேரை தேர்வு செய்து, நவீன் குமாரை கொல்லும் வேலையையும் அவர்களிடம் கொடுத்துள்ளார். இதற்காக, முன்பணமாக 90 ஆயிரம் ரூபாயையும், அந்த மூவருக்கும் அவர்கள் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த மூன்று பேரும் கடந்த சில தினங்களுக்கு முன், நவீன் குமாரை கடத்தி உள்ளனர்.
இதன் பின்னர், அவரை தமிழ் நாட்டிற்கு கொண்டு சென்ற அந்த மூன்று பேரும், நவீன் குமாரை கொலை செய்வதற்கு பதிலாக அவருடன் இணைந்து மது அருந்தி நட்பு பழகி வந்துள்ளனர். தொடர்ந்து, நவீன் குமாரை கொலை செய்தது பற்றி ஹிமாவந்த் அந்த மூன்று பேரிடமும் கேட்டுள்ளார். இதனால், நவீன் இறந்ததாக அவர் மீது கெட்சப்பை ஊற்றி புகைப்படம் எடுத்து அனுபல்லவி மற்றும் ஹிமாவந்துக்கும் அனுப்பி உள்ளனர்.
இதனைக் கண்டதும் பயத்தில் இருந்த ஹிமாவந்த் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, தனது அண்ணனை காணவில்லை என நவீனின் சகோதரி, போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு பின்னர், தாமாகவே வீட்டிற்கு திரும்பி உள்ளார் நவீன் குமார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மூன்று பேர் பெயரையும் ஹிமாவந்த் என்பவரை குறிப்பிட்டு கூறி உள்ளார்.
பின்னர், ஹிமாவந்த் யார் என்பது பற்றி விசாரித்து வந்த போலீஸ், நவீனின் மனைவி அனுபல்லவியின் மொபைல் போனை ஆய்வு செய்த போது, அனைத்து தகவல்களும் தெரிய வந்துள்ளது. மேலும், அனுபல்லவியின் தாயாரும் இதன் பின்னால் இருந்தது தெரிய வந்தது. நவீனைக் கடத்திய மூன்று பேர், அனுபல்லவி மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த சமயத்தில், தனது மனைவியை மட்டும் விட்டு விடுங்கள் என்றும், அவரை நான் நேசிக்கிறேன் என்றும் கூறி நவீன் போலீசாரிடம் கதறி அழுததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மற்ற செய்திகள்
