"டாக்டர், வயித்து வலி உசுரு போகுது.." துடிதுடித்த வாலிபர்.. ஆப்ரேட் பண்ணி பாத்தப்போ.. டாக்டருங்களே அரண்டு போய்ட்டாங்க
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக குழந்தைகள், தங்கள் கையில் கிடைக்கும் பொருட்கள் எதையாவது, உடனடியாக வாயில் போட்டு விடுவார்கள்.

இதன் காரணமாக, குழந்தை வலியால் துடிக்க, பின்னர் மருத்துவனைக்கு அழைத்துச் சென்று, அந்த பொருளை எடுத்த பின்னரே அவர்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைவார்கள்.
பெரும்பாலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள், குழந்தைகளுக்கு தான் அதிகமாக நடக்கும். ஆனால், துருக்கி நாட்டைச் சேர்ந்த 35 வயதான வாலிபர் ஒருவர், வயிற்று வலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
மொத்தமா இவ்ளோ இருந்துச்சா?..
புர்ஹான் டெமிர் என்பவரின் இளைய சகோதரருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு புர்ஹான் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த பிறகு, ஒரு நிமிடம் அரண்டு போயினர். அதாவது, அந்த வாலிபரின் வயிற்றிற்குள், சுமார் 233 பொருட்கள் இருப்பது எக்ஸ் ரே மற்றும் ஸ்கேன் மூலம் தெரிய வந்துள்ளது.
சுத்தம் செய்த மருத்துவர்கள்
நாணயங்கள், பேட்டரிகள், காந்தம், ஆணி, கண்ணாடித் துகள்கள், கற்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அவரது வயிறு முழுவதும் நிரம்பி இருந்துள்ளது. இதனை பார்த்து விட்டு, அங்கிருந்த மருத்துவர்களில் ஒருவர், கிட்டத்தட்ட ஒரு டூல் பாக்ஸ், அந்த வாலிபரின் வயிற்றில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே போல, அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது, ஒன்றிரண்டு ஆணிகள், அவரது வயிற்றுப் பகுதியில் ஊடுருவி சென்றதையும் பார்த்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காந்தம், ஆணிகள், நாணயங்கள், கண்ணாடி துகள்கள் என பல பொருட்கள் இருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அந்த வாலிபரின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அகற்றி வயிறை சுத்தம் செய்துள்ளனர்.
வைரலாகும் புகைப்படம்..
இது போன்ற ஒரு பிரச்சனைகளை பெரும்பாலும் குழந்தைகளிடையே மட்டும் காணப்படுவதாகவும், பெரியவர்களிடம் மிகவும் அரிதாக மட்டும் தான் காணப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த அறுவை சிகிச்சை எப்போது நடந்தது என்பது பற்றிய விவரங்கள் சரியாக தெரியவில்லை. அதே போல, அந்த நபரின் வயிற்றுக்குள் இத்தனை பொருட்கள் எப்படி போய் சேர்ந்தது என்பது பற்றிய விவரங்களும் முழுதாக தெரியவில்லை.
வயிற்று வலியால் துடித்த தனது சகோதரரை காப்பாற்றியதற்காக, அங்கிருந்த மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார் புர்ஹான். வாலிபரின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் பெரியளவில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
