The Legend
Maha others

"எங்ககிட்ட அவ்வளவு காசு இல்ல சார்".. 12 வருஷமா வேதனையுடன் தவிச்ச பாகிஸ்தான் சிறுமி.. ஒரு ரூபாய் கூட வாங்காம ஆப்பரேஷன் செஞ்ச இந்திய மருத்துவர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jul 25, 2022 07:02 PM

12 வருடங்களாக கழுத்து வலியுடன் போராடிவந்த பாகிஸ்தான் சிறுமிக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியிருக்கிறார் இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர். இது உலகம் முழுவதும் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

Girl With Neck Bent Treated Successfully By Doc For Free

Also Read | காதலியை Impress பண்ண இளைஞர் செஞ்ச காரியம்.. அலேக்காக தூக்கிய போலீஸ்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் அஃப்ஷீன் குல். இவர் 10 மாத குழந்தையாக இருந்தபோது துரதிஷ்ட வசமாக ஏற்பட்ட விபத்தில் இவருடைய கழுத்து 90 டிகிரிக்கு திரும்பிவிட்டது. உடனடியாக மருத்துவர்களிடம் தனது மகளை அழைத்துச்சென்றுள்ளனர் சிறுமியின் பெற்றோர். ஆனால், நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது. சிகிச்சைக்கு பணம் இல்லாததால் பெற்றோர்கள் தவித்து வந்துள்ளனர்.

Girl With Neck Bent Treated Successfully By Doc For Free

உதவி

இந்த நிலையில், சிறுமிக்கு பெருமூளை வாதமும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கல்விகற்க முடியாத சூழ்நிலைக்கு சிறுமி தள்ளப்படவே பெற்றோர்கள் கலங்கிப்போயினர். 12 வருடங்களாக இந்த சிரமங்களுடன் சிறுமி போராடி வந்த நிலையில், ஆன்லைன் மூலமாக சிகிச்சைக்கு பணம் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நல்ல மனம் கொண்டோர் அஃப்ஷீனின் நிலையை கண்டு பணம் அளிக்கவே, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுமி மற்றும் அவரது சகோதரர் யாக்கூப் ஆகியோர் இந்தியா வந்திருக்கின்றனர். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர் ராஜகோபாலன் கிருஷ்ணன் கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர் 4 அறுவை சிகிச்சைகள் செய்யப்படவேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

Girl With Neck Bent Treated Successfully By Doc For Free

சிகிச்சை

அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் சிறுமிக்கு முக்கிய அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. 6 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது. இதனால் சிறுமி அஃப்ஷீன் தற்போது பேச துவங்கியுள்ளதாக ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார் யாக்கூப்.

இதுபற்றி அவர் பேசுகையில்,"அறுவை சிகிச்சையின்போது சிறுமியின் இதயம் அல்லது நுரையீரல் நின்றுபோகலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், நல்லபடியாக சிகிச்சை முடிவடைந்தது. அஃப்ஷீன் எங்களுடைய தேவதை. தற்போது அவளால் சிரிக்கவும் பேசவும் முடிகிறது. மருத்துவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நாங்கள் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்" என்றார்.

Girl With Neck Bent Treated Successfully By Doc For Free

சிறுமிக்கு இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் மருத்துவர் ராஜகோபாலன் கிருஷ்ணன். மேலும், ஒவ்வொரு வாரமும் ஸ்கைப் மூலமாக சிறுமி அஃப்ஷீனின் உடல்நிலை குறித்து அவர் விசாரித்துவருகிறார். இதனிடையே பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Also Read | மலை மாதிரி எழுந்த மணல்புயல்.. ரோட்ல சிக்கிய பயணிகள்.. உலக அளவில் திகைப்பை ஏற்படுத்திய வீடியோ..!

Tags : #GIRL WITH NECK BENT #DOCTOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Girl With Neck Bent Treated Successfully By Doc For Free | India News.