"கிம் கர்தாஷியன் மாதிரி மாறணும்.." 4 கோடி செலவு பண்ணி, 40 தடவ ஆபரேஷன்.. கடைசியா இளம்பெண் எடுத்த 'பரபரப்பு' முடிவு
முகப்பு > செய்திகள் > உலகம்சினிமா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல, தங்களின் ஹேர் ஸ்டைல் மற்றும் அணியும் உடைகள் இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கருதுவார்கள்.

ஆனால், இவற்றை எல்லாம் விட சிலர் தங்கள் பின்பற்றும் பிரபலங்களைப் போல அச்சு அசலாக அப்படியே மாற வேண்டும் என நினைத்து, இதற்காக ஏராளமான சிகிச்சை மற்றும் பணத்தினையும் செலவு செய்து வருவதையும் நாம் பார்த்திருப்போம்.
அப்படி இளம் பெண் ஒருவர், பிரபல மாடலான கிம் கர்தாஷியனை போல தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து, பின்னர் அந்த பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
உலக அளவில் பிரபலமான மாடல் கிம் கர்தாஷியனை இன்ஸ்டாவில் பின் தொடர்வோர் மட்டும் சுமார் 32 கோடிக்கும் அதிகம் ஆகும். இவரது உடை மற்றும் உடலமைப்பு உள்ளிட்ட பலவற்றை ரசிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடலான ஜெனிபர் என்பவர், கிம் கர்தாஷியனை போல, மொத்தமாக மாற வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
இதற்காக, தனது 17 வயதில் முதல் அறுவை சிகிச்சை செய்து வந்த ஜெனிபர், அடுத்த 12 வருடங்களில், சுமார் 40 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்காக, மொத்தம் ஆறு லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளார்.
இந்நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் இப்படி மாறிக் கொண்டிருப்பது தனக்கு சரி ஆகாது என்று முடிவு செய்த ஜெனிபர், மீண்டும் தன்னுடைய பழைய உருவத்திற்கே வர வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பேசும் ஜெனிஃபர், "பலரும் என்னை கிம் கர்தாஷியன் என்றே அழைத்து வந்தது, எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சல் ஊட்டத் தொடங்கியது. நான் மாடலாக இருந்து, தற்போது பிசினஸ் செய்து வருகிறேன். இப்படி என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நிறைய விஷயங்களை சாதித்து விட்டேன். ஆனாலும், நான் கர்தாஷியனை போல இருப்பதால் தான், பலரும் எனக்கான அங்கீகாரத்தை தருகிறார்கள். நான் உண்மையில் யார் என்பதே காணாமல் போய்விட்டது. அறுவை சிகிச்சை செய்து செய்து, அதற்கு நான் அடிமையாகி விட்டேன் என்பதை பின்னர் தான் உணர்ந்து கொண்டேன். இதனால் மீண்டும் என்னுடைய பழைய உடலையும் தோற்றத்தையும் பெற வேண்டும் என நான் நினைத்தேன்" என தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், ஜெனிஃபருக்கு தன்னுடைய உடல் தோற்றத்தை நினைத்து ஒருவித எரிச்சல் ஏற்படும் நோய் ஒன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், தனது பழைய தோற்றத்திற்கு மாறுவதற்காக, மருத்துவர் ஒருவரை தேடிப் பிடித்துள்ள ஜெனிஃபர், இதற்காக தற்போது சுமார் 95 லட்சம் ரூபாய் செலவு செய்து தன்னுடைய பல உருவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறார்.
நான் நானாக இருப்பது தான் அழகு என தெரிவிக்கும் ஜெனிபர், அழகுக்கு அடிமையாவது குறித்த ஆவண படத்தையும் எடுத்து இயக்கி வருகிறார்.

மற்ற செய்திகள்
