'நெஞ்சு வலி காரணமாக'.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?.. பிரபல ஸ்டார் கிரிக்கெட் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 25, 2019 07:25 PM

ஸ்டார் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையான குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

West Indies Cricketer BrainLara Admitted Mumbai Hospital

மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் ஸ்டார் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா. இவர் மும்பையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்ததாகவும், அப்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று மதியத்துக்கு மேல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகாத நிலையில்,இன்று மதியம் 12.30 மணி அளவில், அவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக மும்பையில் உள்ள மேற்குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவ ஏஜென்ஸி வட்டாரங்கள் தெரிவிப்பதாக இந்து உள்ளிட்ட தேசிய ஊடகங்களில் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

Tags : #WESTINDIES #BRAINLARA